துபாய் நூலகத்துக்கு நூல் அன்பளிப்பு

Vinkmag ad

துபாய் நகரில் உள்ள 89.4 தமிழ் எஃப்.எம். பண்பலை வானொலி செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தில் உலகில் முதன் முறையாக பொதுமக்கள் படிக்கும் வகையில் நூலகத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்புசுல்தான்’ என்ற நூலை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரகப் பிரிவின் சார்பில் அதன் மூத்த உறுப்பினரும், கல்லூரியின் ஓய்வுபெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்.ஜே. அருண் இடம் வழங்கிய போது. அருகில் சங்க பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்த நூலகத்தை பொதுமக்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு வந்து நூல்களை எடுத்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நூல்களை விருப்பமுள்ளவர்கள் அன்பளிப்பாகவும் வழங்கலாம்.

News

Read Previous

வலது கன்னம் – சிறுகதை – எஸ்.ராமகிருஷ்ணன்

Read Next

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM)

Leave a Reply

Your email address will not be published.