கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM)

Vinkmag ad

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM)

கோவை :

கோவை நகரில் இருந்து பாலக்காடு செல்லும்  544 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் கே.ஜி. சாவடி அருகில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில்

‘தேசபக்தி கோட்டை’  திறக்கப்பட்டுள்ளது.

இந்த ‘தேசபக்தி கோட்டை’யானது கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ந் தேதி அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ‘THE FORT OF PATRIOTISM’ எனப்படும் ‘தேசபக்தி கோட்டை’ குறித்து ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் நிர்வாகி வழக்கறிஞர் வி. நந்தகுமார் கூறியிருப்பதாவது :

இந்திய விடுதலை வீரர்கள் குறித்து இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த தேசபக்தி கோட்டை இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேச விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு இந்தியரும் தேசபக்தி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் இத்தகைய செயல்பாடுகளை நோக்கி செயல்பட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இது திகழ்ந்து வருகிறது.

இங்கு தேசப்பிதா மகாத்மா காந்தி,  மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, கான் அப்துல் கபார்கான்,திப்பு சுல்தான், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட 150 சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புகைப்படங்களும், அதன் கீழே அந்த தியாகிகளின் சிறப்புக்கள் குறித்து இடம் பெற்றுள்ளன.

இன்னும் அதிகமான தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தேசபக்தி கோட்டையை பொதுமக்களும், இளைஞர்களும், மாணவ, மாணவியரும் பார்த்து தேசத்துக்கு அரும்பாடுபட்ட தியாகிகளை நினைவு கூற வேண்டும்.

இதனை வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம் என்றார்.

இந்த தேசபக்தி கோட்டையானது தனியார் அறக்கட்டளையின் சார்பில் இந்தியாவில் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்ட முதலாவது அருங்காட்சியகம்  என்பது குறிப்பிடத்தக்கது.

தேசபக்தி கோட்டை குறித்த மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள ………..

+91 93631 26262

THE REASON FOR CONSTRUCTION IS EVERY INDIAN SHOULD KNOW THE SACRIFICES AND HISTORY OF OUR GREAT FREEDOM FIGHTERS AND FREEDOM STRUGGLE….EVERY INDIAN SHOULD WORK PATRIOTISM..NATIONAL INTEGRATION..COMMUNAL HARMONY…..

— ADV.NANDAKUMAR

கோவை தேசபக்தி கோட்டையின் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகுமார் உடன் நேர்காணல்

கோவையில் இந்திய விடுதலைதலைவர்களின் புகைப்படங்கள் கொண்ட தேச பக்தி கோட்டையில் ஈரோடு கு ஜமால் முஹம்மது

கோவையில் இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்கள் கொண்ட தேச பக்தி கோட்டை

As many as 130 portraits of freedom fighters, including Maha ..

Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/93564280.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

Ahead of the Independence Day celebrations, District Collector G.S. Sameeran inaugurated ‘The Fort of Patriotism’ near KG Chavadi here on Sunday. 

Jai Hind Foundation, a Coimbatore-based not-for profit organisation, has built the permanent structure on two acres and has designed it on the theme of Red Fort.

https://www.thehindu.com/news/cities/Coimbatore/district-collector-inaugurates-the-fort-of-patriotism-in-coimbatore/article65768353.ece

News

Read Previous

துபாய் நூலகத்துக்கு நூல் அன்பளிப்பு

Read Next

கார்கில் போர் வெற்றி தினம்

Leave a Reply

Your email address will not be published.