கார்கில் போர் வெற்றி தினம்

Vinkmag ad

கார்கில் போர் வெற்றி தினம்.

கார்கில் மலை சிகரத்தில்
கால் பதித்த எதிரிகளை
கால் கீழ் போட்டு மிதித்து
காலனிடம் அனுப்பிய நாள் .

நேர்முக எதிரி பாகிஸ்தானை
போர்முனை தன்னில் வீரமுடன்
ஓர்முகமாக நின்று விரட்டி
சீர்மிகு பாரதத்தின் பெருமையை
பார்புகழ உயர்த்திய நாள்-

உறையவைக்கும் பனிப்பொழிவில்
உயிரைப் பணயம் வைத்து நின்று
ஊடுருவியஉலுத்தர்கள் கூட்டத்தை
ஓட ஓட விரட்டி அடித்து, நம்
.வீரமதை உணர்த்திய நாள்.

பாரதத்தின் மானம் காக்க, எதிரி
பாகிஸ்தானை எதிர்த்து நின்று
பாரடா எங்கள் வீரம் என்று
பறைசாற்றிய பொன்னான நாள்.

எல்லையில் எப்பொழுதும்ஊடுருவி
தொல்லை தரும் பாகிஸ்தானியரை
இல்லை என்று ஆக்கும் வரை
இல்லை ஓய்வு எங்களுக்கென
வல்லமையுடன் போராடிடும்
எல்லை காக்கும் வீரர்களுக்கு
என்றும் எங்கள் வீரவணக்கம்.

வந்தே மாதரம் .வாழ்க ராணுவம் .
வந்தே மாதரம். வாழ்க பாரதம்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
26.07.2023.

News

Read Previous

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM)

Read Next

கடின உழைப்பு தொடர் முயற்சி . .

Leave a Reply

Your email address will not be published.