துபாயில் காணொலி வழியாக நடந்த ‘நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

Vinkmag ad

துபாயில் காணொலி வழியாக நடந்த நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

துபாய் :

துபாயில் முதுகுளத்தூர்.காம் சார்பில்  சம்சுல் ஹுதா பானு  எழுதிய ’நாலு பேருக்கு நன்றி’  என்ற நூல் அறிமுக விழா காணொலி வழியாக நடந்தது.

தமிழ்நாடு & புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும்,  உதயதாரகை இதழ்,  (இரு மாதங்களுக்கு  ஒரு முறை), ஆசிரியர்  குழு உறுப்பினருமான ஏ. ஃபாத்திமா ஜலால் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சம்சுல் ஹூதா பானுவின் எழுத்துப் பணியை பாராட்டினார்.  குறிப்பாக பெண் ஒருவர் இத்தகைய பணியில் ஈடுபடுவது குறைந்து வரும் நிலையில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவரை உற்சாகப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இசைமுரசு எஃப்.எம். இணைய வானொலியின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் முஹம்மது அஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார்.


திருச்சி, கோதை பதிப்பக உரிமையாளர், தேன்மொழி ராஜாமகள்
முதுகுளத்தூர் ஆமினா துரை, இளஞ்செம்பூர், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செ. கார்த்திகேயன், அரசு கால்நடை மருத்துவர் டாக்டர் எம். சுந்தரமூர்த்தி,  சென்னை கவிஞர் சுப. சந்திரசேகரன், கீழை அபுல் ஹசன், காயல் யஹ்யா முஹ்யித்தீன், ஆய்வாளர் ஜாபர் ரஹ்மானி, இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக நூலாசிரியர் சம்சுல் ஹுதா பானுவின் ஏற்புரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

News

Read Previous

ஜூன்.10, நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

Read Next

தேரிருவேலியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published.