தீவினையச்சம்

Vinkmag ad

தீவினையச்சம் :
தீமை தருவது தீவினையாமே.தீவினை என்றும் தீயெனப்படுமே தீவினை என்பது தீயெனச்சுடுமே தீவினை என்பது தீயினும்  சுடுமே .
தீமை செய்தலை தவிர்த்தல் நலமே.தீமை செய்தலை மறத்தல் பலமே. தீவினை நம்மைத் திருப்பித் தாக்கும்.  தீவினை தவிர்த்தல் தினமும் காக்கும் .தீவினை எதிர்வரும் தீமையைப் போக்கும். தீயவன் எனப்பெயர் வருவதைத் தவிர்க்கும்.தீயவராயின் நம்மை தீண்டாதொழிப்பார். தீயவர் நட்பும்தீமையே தருதலால்தீயவர் கேண்மை தவிர்த்திடல் மதியாம் .தீயினை அணைக்கும் நீரது போல் வரும் தீமையைத் தடுக்கும் தீவினையச்சமே.திருவள்ளுவரது திருக்குறற் பொருளை தீவிரமாக உணர்தல்தானே தீவினை செய்தலை தீர்க்கமாய்த் தடுக்கும்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்10.2.2022 ____________________________.

பிறனில் விழையாமை 
மன்பதை தன்னில் மனிதர் வாழ்வில்  ,இன்பம் பெறுதல், இனத்தைப் பெருக்குதல் ,என்பதற்காக அமைந்தது தானே 

News

Read Previous

பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.Group2&2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா

Read Next

வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார் !

Leave a Reply

Your email address will not be published.