பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.Group2&2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா

Vinkmag ad

பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை
இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.Group 2 & 2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா

பரமக்குடி :


பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை
இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2&2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா நடந் தது.


இந்த விழாவுக்கு கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் முகம்மது ரபி தலைமை வகித்தார். செயலாளர் கமருல் ஜமாலுதீன் சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில் அனைத்து சமூகத்தினரும் பயன் பெறும் வகையில் நடத்தப்படும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி இங் கு நடத்தப்படுகிறது. இந் த வாய்ப்பினை இந் த பகுதியைச் சேர்ந் தவர்கள் பயன்படுத்தி அரசுப் பணியில் சேர முயல வேண்டும் என்றார்.


முன்னதாக கீழப் பள்ளிவாசல் பேஷ் இமாம் ஜலாலுதீன் மன்ஃபஈ இறைவசனங்களை ஓதினார். கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார்.


கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.


இந்த நிகழ்ச்சியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல் கான், கீழ முஸ்லிம் நர்சரிப் பள்ளித் தாளாளர் ஹிதாயத்துல்லா உள்ளிட்ட பலர் கலந் து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் புரோஸ் கான் உள்ளிட்ட குழுவினர் இந்த பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடக்கத் தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர்.
இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து சமூகத்தையும் சேர்ந் த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சேர்ந் துள்ளனர். அவர்களுக்கு திறமையான ஆசிரியர் குழுவினர் தேவையான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

News

Read Previous

புதுக்கோட்டை அருகே மகளிர் தின விழா

Read Next

தீவினையச்சம்

Leave a Reply

Your email address will not be published.