ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்

Vinkmag ad

தலைப்பு : ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்.

ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும்.

ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது.

தமிழில் சுஜாதா வகுத்த நடையை பின்பற்றி, தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஹைக்கூ படைப்புகள் அதிகம்.

தமிழ் மொழி அனைவருக்கும் சொந்தமானது .அதில் எந்திரங்களுக்கும் மட்டும் ஏன் விதிவிலக்கு ?

தமிழ்நாட்டைச் சேர்ந்த(ஈரோடு மாவட்டம் கோபி) இளைஞர் திரு விக்னேஷ்.அவர்கள்,தமிழ் மொழியின் முதல் டெக்னாலாஜிக்கல் ஹைக்கூ கவிதை புத்தகம் (தலைப்பு : டெக் ஹைக்கூ) உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஹைக்கூ படைப்புகள் காதலையும் ,இயற்கையும் மட்டுமல்ல எந்திரங்களும்,தொழில்நுட்பங்களும்நிரல் மொழியோடு (Programming Languages) கவி மொழியும் பேசும் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.

*********************************************************

‘டெக் ஹைக்கூ புத்தகத்திலிருந்து சில உங்கள் பார்வைக்கு’

“பட்டறிவு, பகுத்தறிவு வேறுபாடுகள் கலைகின்றன

மை தடவா கைநாட்டில்

Finger Print…!!”

**************

உயிர் தரும் செயற்கைத்தாய்

நவீன காலத் தொப்புள்கொடி

மின்னூட்டி…!!!

(charger)

***************

இருவிரல் காட்டி நாவைக் கொஞ்சம் நீட்டி

சிரிப்பைத் தொலைத்த புகைப்படம்

தாமி…!

(Selfie)

***************

மதுபோதை ஏதுமில்லை

தண்ணீரில் தள்ளாட்டம்

Washing Machine…!

***************

இதழோடு இதழ்  பரிமாற்றம் ஏனோ

எச்சில் சுமக்கும் தொடுதிரை

video calling…!

இப்படி எந்திரங்களை வைத்து கவிதை மட்டும் அல்ல,ஹைக்கூ வும் இரண்டு வரிகளில் அழகாய் சொல்ல முடியும் என்று நிரூபித்துள்ளார். திரு.விக்னேஷ் அவர்கள் படித்தது முதுநிலை கணினி பொறியியல். படித்துப் பெற்ற கணினி அறிவை, தொழில்நுட்பங்களோடு மட்டும் நின்றுவிடாமல்,தமிழ் மொழியின் புதிய பரிணாமத்திற்கும் பயன்படும் வகையில் அதை கையாண்ட விதம் பாராட்டுதற்குரியது.

அவரின் இந்த புதுமையான தமிழ் முயற்சியை பாராட்டி “கலாம் உலகசாதனை அமைப்பு CREATED A FIRST TECHNOLOGICAL HAIKU POETRY BOOK IN TAMIL LANGUAGE BY YOUNGSTER “என்ற பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. மேலும் International book of Record, India Book of record, Cholan Book of world Record போன்ற அமைப்புகள் இவரது சாதனையை உலகசாதனையாக அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு: இதுவரை, எந்த ஒரு தமிழ் இதழ்களிலும் வெளியிடப்படாத இந்த அரிய சாதனையை முதுகுளத்தூர் வலை மின்னிதழ் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் முதலில் வெளியிட்டு இச்செய்தியை பதிவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)

BOOK LINK:

https://www.google.co.in/books/edition/Tech_Haiku/hfeVDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=tech%20haiku&pg=PP1&printsec=frontcover&bsq=tech%20haiku

News

Read Previous

ஏக்கம்..

Read Next

தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்… தமிழக அகழாய்வுகளில் இதுவரை கிடைத்தது என்ன? 

Leave a Reply

Your email address will not be published.