சென்னையில் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Vinkmag ad

தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு ஆலோசனை அடிப்படையில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1 .பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர்களின் மிக சர்ச்சை அவதூறான பேச்சு அதை தொடர்ந்து வக்கிரமான பேச்சை கண்டித்து இன்ஷா அல்லாஹ் கூட்டமைப்பு சார்பாக மிக பெரிய அளவில் திருச்சியில் வருகின்ற 25 ம்தேதி சனிக்கிழமை மாலை கண்டன பொதுக் கூட்டம் நடத்துவது எனவும்.

இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூதாய தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையிலும், பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி அதை நடத்துவது எனவும்.

  1. ஆர் எஸ்.எஸ்.,பாஜகவின் பாசிச சக்திகளின் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக இந்துக்கள் முஸ்லிம்கள் கிறுஸ்தவர்கள் என பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வெறுப்பு பேச்சுக்களை பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடிக்கணக்கான மக்களின் கையெழுத்தை பெறும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடத்தில் வழங்குவது எனவும்.
  2. உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அவர் வாழ்க்கை வரலாறு குறித்த துண்டு அறிக்கைகளை லட்சகணக்கான மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஷ்பி ஹஜரத், பஷிர் அஹமது மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர்,மமக பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, தமுமுக பொது செயலாளர் ஹாஜா கனி, ஜமாத்துல் உலமா சபையின் துணை தலைவர் மந்தை வெளி இமாம் இல்யாஸ் ரியாஜி மற்றும் ரஹ்மத்துல்லாஹ் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் தலைவர் ஹனிபா மன்பயி, பிஎப்ஐ தலைமை நிலைய செயலாளர் அப்துல் ரஜாக், ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்கிரி, பொது செயலாளர் முஜிபுர் ரஹ்மான் பாக்கவி, மில்லி கவுன்சில் இப்னு சவுத், இந்திய தேசிய லீக் கட்சி பொருளாளர் குத்தூஸ், ஜமாஅத்தே இஸ்லாமி ஜலால், மற்றும் மன்சூர் முஸ்ஸலியார் மற்றும் சமூதாய இயக்கங்கள் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News

Read Previous

பரமக்குடி பள்ளிக்கூட சிறுவனுக்கு டாக்டர் பட்டம்

Read Next

அதிகளவில் ரத்த தானம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு

Leave a Reply

Your email address will not be published.