பரமக்குடி பள்ளிக்கூட சிறுவனுக்கு டாக்டர் பட்டம்

Vinkmag ad

பரமக்குடி பள்ளிக்கூட சிறுவனுக்கு டாக்டர் பட்டம்

பள்ளிக்கூட நிர்வாகிகள் பாராட்டு

பரமக்குடி :

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா.

இந்த மாணவருக்கு சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இளம் வயதில் கார் பற்றிய பல விசயங்களை மிகவும் துல்லியமாக கூறி வருவதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே ஆசியா புக் ஆப் ரிக்கார்டு , இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்டு ,தி சென் அகாடமியின் பாராட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை ஏற்கனவே பெற்றவர்.

மாணவர் சந்தோஷ் கண்ணாவுக்கு ஆயிரவைசிய சபை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் சேர்மனுமான ராசி என். போஸ் அறிவுறுத்தலின்படி தாளாளர் பி. ராஜேஷ் கண்ணா, பொருளாளர் பி. பிரசன்னா உள்ளிட்டோர் இன்னும் பல பட்டங்களை பெற வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அப்போது பள்ளிக்கூட முதல்வர் ஜெயபிரமிளா, துணை முதல்வர் பவானி, மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாணவரின் தந்தை தண்டாயுதபாணி காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மாணவர் என்ற பெருமையை த. சந்தோஷ் கண்ணா பெறுகிறார்.

டாக்டர் பட்டம் பெற்ற சந்தோஷ் கண்ணா விற்கு பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் என பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துக்களை தெரிவிக்க :

+91 94423 20020

News

Read Previous

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி

Read Next

சென்னையில் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *