இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி

Vinkmag ad

தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’ தொடர்பான

தகவல் கொண்ட நூலை வழங்கி உதவிய இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி

மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி

இளையான்குடி  :

தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’ தொடர்பான தகவல் கொண்ட நூலை வழங்கி உதவிய இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி என மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் குளிர்மைக் கலையரங்கத்தில் முதுகலைத் தமிழ்த்துறையின் சார்பில் மாணவர் மன்ற விழா மற்றும் தளிர் மாணவர் காலாண்டிதழ் வெளியீட்டு விழா 12.05.2022 வியாழக்கிழமை காலை நடந்தது.

தொடக்கமாக இறைவசனம் ஓதிய பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இந்த விழாவுக்கு முதல்வர் முனைவர் ஏ. அப்பாஸ் மந்திரி தலைமை வகித்தார்.  அவர் தனது தலைமையுரையில் தமிழ் ஒரு வீரம் செறிந்த மொழி என குறிப்பிட்டார்.

கல்லூரி தலைவர் மற்றும் பொருளாளர் எஸ்.ஏ.எம். அப்துல் அஹது முன்னிலை வகித்தார்.  முதுகலைத் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ப. இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார்.

ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய திப்பு சுல்தான், வெளிச்சம் உள்ளிட்ட நூல்களை சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமாருக்கு முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி முதுவை ஹிதாயத் வழங்கினார்.

உதவிப் பேராசிரியர் கா. அப்துல் ரகீம் சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.

சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் தளிர் மாணவர் காலாண்டிதழை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’ தொடர்பான தகவல் கொண்ட நூலை வழங்கி உதவிய இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.  இந்த சம்பவம் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. கல்லூரி மாணவ பருவத்தில் இந்த பகுதியை பற்றி தெரியாத சூழலில் இந்த கல்லூரிக்கு வந்தேன்.

இந்த கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்துக்கு காவல்துறைக் கண்காணிப்பாளராக பொறுப்பு வகிப்பதுடன், இந்த கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது இறைவனின் மிகப்பெரிய கிருபை ஆகும்.

மாணவப் பருவம் மிகவும் உன்னதமான பருவம் ஆகும். இந்த பருவத்தில் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.  கல்லூரிப் பருவம் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய தொரு பருவம் ஆகும். எனவே பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

கழகம் என்பது அறிவார்ந்தவர்கள், புலமை மிக்கவர்கள் உள்ள சபையாகும். இதன் காரணமாகவே தந்தை பெரியார் திராவிட கழகம் என பெயரிட்டார். இதன் பின்னரே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டதற்கு ஒரு முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பு பயிற்சியை அதிகம் மாணவ, மாணவியர் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன், அறிவை வளர்த்துக் கொள்ளவும், போட்டித் தேர்வுக்கும் உதவியாக இருக்கும். தோல்வியை நாம் பெற்ற காயமாக கருதி கடின உழைப்புடன் வெற்றியை நோக்கி முயற்சிக்க வேண்டும்.

லெபனான் நாட்டு கவிஞர் கலீல் ஜிப்ரானின் கவிதைகளை நினைவு கூர்ந்த அவர், நேர்மையுடன் உழைத்தால் நமது முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் போல் உயர் பொறுப்பை அடைய முடியும்.

நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே ஆக முடியும் என்பதை எனது கடின உழைப்பின் மூலம் பெற்றுள்ள அனுபவம் ஆகும் என்றார்.

பேராசிரியர் ஷேக் அப்துல்லா நன்றியுரை நிகழ்த்தினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்வினை சே. சீனி ஆசிமா பானு, மு. அபிநயா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினர்.

News

Read Previous

துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

Read Next

பரமக்குடி பள்ளிக்கூட சிறுவனுக்கு டாக்டர் பட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *