சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

Vinkmag ad

சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம்

இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM),  ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில்,  ஏப்ரல் 19 அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடியது.

ஜித்தா வாழ் தமிழர்கள் திரண்டு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாட ‘சித்திரை கொண்டாட்டத்தில்’ கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிநிரல் ஒருங்கிணைப்பாளர் திரு விஜயேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  குழந்தைகள் நடனம், பாடல், நாடகம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றில்  தங்கள் திறன்களை காண்பித்தனர். சிறுமி ஷஹெநாஜ் பாஷா அரேபிய பாடலுக்கு நடனமாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். திருமதி கீதா சார்லஸ், திருமதி ஹெப்சி ஜான் அணியினர்குழந்தைகளுக்கு கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அற்புதமான நாடகத்தில் நடித்து மகிழ்வித்தனர்.

Spell Bee மற்றும் Collage போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பங்கேற்ற மற்ற குழந்தைகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி ஊக்குவித்தனர்.

திரு கோபால் வேதா தலைமை உரையில் SNM நிறைவேற்றிய சமூக நலநடவடிக்கைகளையும், SNMமின் கொள்கை, மதிப்பு மற்றும் எதிர்கால திட்டங்களை வலியுறுத்தினார்.

மேதகு இந்திய துணை தூதரக முதன்மை அதிகாரி (Consul General) ஃபைஸ் அகமது கித்வாய் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேதகு இந்திய துணை தூதரக சமூகநலத் துறை அதிகாரி (Consul Welfare)  சு. த. மூர்த்தி
பங்கேற்று தனது உரையில் நலிந்த சக இந்தியர்களை ஆதரித்து உதவுமாறும் மற்றும் சவுதி அரேபியாவின் சட்டங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தினார்.

திரு மொஹிதீன் ஒரு நினைவு கேடயத்தை மேதகு ஃபைஸ் அகமது கித்வாய் அவர்களுக்கு வழங்கினார். திரு பாண்டியன் மேதகு மூர்த்தி அவர்களுக்கு ஒரு நன்றிக் கேடயத்தை வழங்கினார். இந்த நேரத்தில், SNMசமீபத்தில் ஜெட்டாவில் இறந்த சிகாமணி என்ற ஒரு இந்தியருடையகுடும்பத்துக்கு நிதி உதவி அறிவிப்பையும் வெளியிட்டது. இந்திய துணை தூதரகம் அவரது குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று சிகாமணியின் உடலை ஜித்தாவில் அடக்கம் செய்தது என்று மேதகு மூர்த்தி அவர் தனது உரையில் கூறினார்.

Jeddah National Hospital உரிமையாளர் திரு முகமது அலி மற்றும் Al Nawras Stationary மேலாளர் திரு மொஹிதீன் பாவா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியினை திரு அமீர் பாஷாவும்  திருமதி அனுராதா விக்டரும் தொகுத்து வழங்கினர். திரு மொஹிதீன் நன்றி உரைத்தார்.

News

Read Previous

துபாயில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நகைச்சுவைத் திருவிழா

Read Next

துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *