கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

Vinkmag ad

கோவை :

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் சர்வதேச முஸ்லிம் ஸ்காலர் கவுன்சில் அமைப்பின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்குக்கு ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியின் செயலாளர் பன்னூலாசிரியர் அமீர் அல்தாப் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் இந்த கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னரே கோவை நகரில் இது போன்ற சமுதாய கல்லூரிகள் அதிகரித்து வந்துள்ளதை நினைவு கூர்ந்தார். இந்த கல்லூரியில் நல்லொழுக்க கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இதில் படித்தவர்கள் பல்வேறு பொறுப்புகளை முக்கிய நிறுவனங்களில் வகித்து வருகின்றனர். விரைவில் இந்த நிறுவனம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது என்றார்.

முன்னதாக கல்லூரி மாணவி இறைவசனங்களை ஓதினார். பேராசிரியர் ஹாபிழ் நாசர் அலி உமரி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் டாக்டர் ஜாஸ்மின் அவர்களின் ஆய்வுத்திறன் உள்ளிட்டவை குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஆய்வாளர் டாக்டர் ஜாஸ்மின் இஸ்லாமிய ஆராய்ச்சியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் பெண்கள் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ஆய்வுத் துறையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் ஒவ்வொருவரும் ஆய்வுத்துறையில் முன்னேற வேண்டும். கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கோவை இஸ்லாமிய மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடத்தின் தாளாளர் டாக்டர் அப்துல் ஹக்கிம், பெண் கல்வி குறித்து இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளவை குறித்து விவரித்தார். குறிப்பாக கல்வியானது இஸ்லாம் கூறும் வழியில் இருக்க வேண்டும். இதன் மூலம் வாழ்க்கை செம்மையடையும் என குறிப்பிட்டார்.

கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளர் எம். அப்துல் ஹக்கீம் ’முஸ்லிம் பெண்ணாக இருப்பதால்…….’ என்ற தலைப்பிலும், குக்ஸ் கேப்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பாரதி ’பெண்கள் முன்னேற்றம்’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

ஜெஸிமா பானு சித்திகியா நன்றியுரை நிகழ்த்தினார்.

News

Read Previous

சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Read Next

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

Leave a Reply

Your email address will not be published.