குயவன்குடியில் சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

Vinkmag ad

குயவன்குடியில் சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் ராபிஅதுல் பஸரிய்யா மகளிர் ஷரீஅத் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த  மகளிர் ஷரீஅத் கல்லூரியின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்று முடிந்த சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு தற்பொழுது சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த போட்டியில் பங்கேற்ற பெரும்பாலான ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுவிட்டது.

மீதமுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 04-01-2022 செவ்வாய்க்கிழமை காலை குயவன்குடி ராபிஅதுல் பஸரிய்யா மகளிர் ஷரீஅத் கல்லூரி  வளாகத்தில் நடந்தது.  

இந்த நிகழ்ச்சிக்கு அக்பர் அலி தலைமை வகித்தார்.  ஹசன் கலீமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துபாய் தொழிலதிபர்  முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூஃப் காக்கா சிறப்புரை ஆற்றி சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்கள். அப்போது அவர் பேசியதாவது : மார்க்க கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்கள்.

துபாய் பவர் குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜாஹிர் ஹுசைன் , ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்,  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்கள்.

ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சன்மார்க்க திறனாய்வு போட்டியில் பங்கேற்ற பெண்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். அமீர அப்பாஸ் ஹைரி, ஹாஃபிழ் முஹம்மது மன்சூர், ரஷீத் கான் நாஃபியீ ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

News

Read Previous

ஆலிமாக்களுக்கு இணையவழி மொழி மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி வகுப்புகள்

Read Next

தொற்றுகளும் தொல்லைகளும்

Leave a Reply

Your email address will not be published.