கல்விக் கடனுக்காக….

Vinkmag ad


குடும்பச் சொத்துக்களை  குடும்பத்திற்கு சொந்தமான நகைகளை விற்கும் போது கூட அதிலும் ஊழல் செய்வது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் மோடி அரசுதான். இவர்களது ஆட்சியில் வங்கிகளுக்கு  செல்வது என்றாலே, மோடி அரசின் களவாணி நண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஏனென்றால் அவர்களுக்கு பொதுப்பணம் பரிசாகக் கிடைக்கிறது; வங்கிகளே பரிசுப் பொருளாக மாற்றப்படுகின்றன; பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒப்பந்தங்கள் தாராளமாக தாரைவார்க்கப்படுகின்றன.

ஒரே ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: நிறுவனத்தின் பெயர் – ரிலையன்ஸ் நேவல் ; உரிமையாளர் – அனில் அம்பானி; வங்கி கொடுத்துள்ள கடன் தொகை – ரூ.12,429 கோடி ; இந்த நிறுவனம் திருப்பிச்  செலுத்தியது – வெறும் ரூ.800 கோடி ; அரசாங்கம் தள்ளுபடி செய்தது – ரூ.11,629கோடி (மொத்தக் கடனில் 94 சதவீதம்) 

மேற்படி அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பரோடா வங்கி, எக்சிம் வங்கி, சென்ட்ரல் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, யுனைடெட் வங்கி, ஒபிசி வங்கி, ஐஎப்சிஐ வங்கி உள்ளிட்ட வங்கி நிர்வாகங்கள்  மொத்தமாக ரூ.11,629 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்துவிட்டு, நீங்கள் வாங்கிய வெறும் 5 லட்சம் ரூபாய் கல்விக் கடனுக்காக உங்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன.

-சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஎம்

News

Read Previous

தமிழில் அரபுச் சொற்கள்

Read Next

காமன்வெல்த் சிறுகதை பரிசு

Leave a Reply

Your email address will not be published.