கலைஞர் நினைவேந்தல் கவிதை

Vinkmag ad

கலைஞர் நினைவேந்தல் கவிதை

தமிழ்தாயின்
தங்கப் புதல்வர்…

தமிழகத்தின்
தலைசிறந்த முதல்வர்…

புதுமைச் சிந்தனை கொண்ட
புரட்சி எழுத்தாளர்…

கவி வரிகளால்
புவி வென்ற கவிஞர்…

காலத்தால் அழியாத
ஞாலப்புகழ் கலைஞர்…

தோல்வி கண்டும்
துவண்டதில்லை…

வெற்றி கண்டும்
மமதையில்லை…

மத்தியில் ஆள்பவருக்கே
புத்தியுரைத்த
சக்திமிகு அறிவுக் கத்தி….

வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்
எண்ணமிகு தமிழை
ஏற்றத்துடன் விதைத்த
போற்றுதலுக்குரிய தலைவர்…

எம்மொழியாம் பொன்மொழியைச்
செம்மொழி ஆக்கிய
தமிழன்னையின் தலைமகன்…

இன்னலுறும் ஏழையின்
கண்ணீர் கண்டால்
நெஞ்சுருகிக் கசியும்
ஏழைகளின் முதல்வர்…

அன்று
தந்தை இழந்த பிள்ளையென
தடுமாறி நின்றோம்…
தடம் மாறிச் சென்றோம்…

இன்று
தங்கமகன் தரும் நல்லாட்சியால்
துன்பம் மறந்தோம்…
துணிந்து நின்றோம்…

இன்னும் ஆயிரமாண்டுகள்
இன்பத்தலைவர் கலைஞரின்
இன்முக ஆட்சி காட்சியாகுமென
இந்த நினைவேந்தலில்
இதயத்தில் கொள்வோம்…

வாழிய கலைஞர் புகழ்…
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு…

கவிஞர் கே.ஏ.ஹிதாயத்துல்லா, பரமக்குடி

+91 97501 05141

News

Read Previous

முதுவை இளைஞருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Read Next

பாதை

Leave a Reply

Your email address will not be published.