ஊடுப்பயிர்

Vinkmag ad

ஊடுப்பயிர்

பண்பினைப் பயிரிட்டு ஒரு பாரம்பரியத்தை இந்த மண்ணுக்குத்தா!

அன்பினைப் பயிரிட்டு இதயங்களிலிருந்து மகசூல் பெறு!

உழைப்பினைப் பயிரிட்டு உதிரத்தின் வேர்வையில் உணவினை தேடு!

செல்வத்தைப் பயிரிட்டு ஏழ்மையின் வயிற்றினில் உண்டியல் போடு!

நட்பினை பயிரிட்டு மனிதத்தின் புனிதத்தை இறைவனுக்குச் சொல்!

அறிவினைப் பயிரிட்டு ஆத்மத்தின் விழிப்பினை வாழ்கைக்கு கொடு!

முயற்சியினைப் பயிரிட்டு முழுமையான ஈடுபாட்டில் சாதனைகளைச் சந்தி!

இயற்கையைப் பயிரிட்டு கண்கொள்ளாக் காட்சியில் மனதைப் பறி கொடு!

புன்னகையைப் பயிரிட்டு பூக்களின் மலர்வுகளாய் பூத்திருக்கப்  பழகு!

கல்வியைப் பயிரிட்டு வெள்ளாமை விளைச்சலை வாரிசுகளுக்குச் சூடு!

தொழுகையைப் பயிரிட்டு  கண்ணீர் நனைவுகளில் இறையருளைத் தழுவு!

_கம்பன் ஹாரூன் ரஷீத் _

நன்றி : முஸ்லிம் முரசு – ஜுலை 2013

News

Read Previous

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

Read Next

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு

Leave a Reply

Your email address will not be published.