உலகத் தாய்மொழி தின விழா

Vinkmag ad

                உலக சாதனை நிகழ்வு – 2022

உலகத் தாய்மொழி தின விழா

                உலக சாதனை நிகழ்வு – 2022

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் பொருண்மையில் வருகின்ற 20.02.2022 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தொடர்ச்சியாக 7 மணி நேரம், 7 கண்டங்கள் 24 நாடுகளிலிருந்து 24 தமிழறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை தேசிய கல்வி அறக்கட்டளை, கல்லிடைக்குறிச்சி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்,  மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு ஆகியவை இணைந்து உலகத் தாய்மொழி தின விழா பிப்ரவரி மாதம் 20.02.2022 ஆம் நாளன்று சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையுரை வழங்க பேராசிரியர் என். பஞ்சநதம், துணைவேந்தர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககம், தமிழ்நாடு அரசு,  முனைவர் கா.மு.சேகர், மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு,  திரு.ம.சி.தியாகராசன், துணை இயக்குநர், நிருவாகம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்நாடு அரசு ஆகிய தமிழறிஞர் பெருமக்களும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள்  கலந்துகொள்கின்றனர்.  இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலைமாமணி, செவாலியர், டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள், தலைவர், வி.ஜி.பி. குழுமம், மற்றும் நிறுவனத் தலைவர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் அவர்கள் பேருரை வழங்கயிருக்கிறார்கள்.

கருத்தரங்க உட்தலைப்புகள் 1.பாரதியின் ஆத்திசூடி-தலைமை, கவிஞர் பேரா, ஒருங்கிணைப்பாளர், கவிஞர் கீதா ஶ்ரீராம், 2.மொழிகளின் தாய்மொழி தமிழ்- தலைமை, கவிஞர் இரா.தேன்மொழி, ஒருங்கிணைப்பாளர், கவிஞர் ஹிதாயத்துல்லா, 3.தமிழ் எங்கள் இளமைக்குப் பால்- தலைமை, முனைவர் பாக்கியலட்சுமி வேணு, ஒருங்கிணைப்பாளர், முனைவர் தி.பிரேமலதா, 4.வாழ்வியல் பேசும் வள்ளுவம் தந்த தமிழ்மொழி- தலைமை, முனைவர் க.சங்கர், ஒருங்கிணைப்பாளர், கவிஞர் முனைவர் பா.ஜான்சிராணி ஆகியோர்கள் கருத்தரங்கத்தை சிறப்பாக வழி நடத்த உள்ளனர்.

News

Read Previous

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

Read Next

பயணங்கள்

Leave a Reply

Your email address will not be published.