உறவுகளின் உன்னதம்

Vinkmag ad

உறவுகளின் உன்னதம் .தாத்தா ,பாட்டி வேராக, தாயும் தந்தையும் மரமாகசகோதர ,சகோதரிகள் கிளையாக ,பிள்ளைகளெல்லாம் விழுதாக , உறவினரெல்லாம் இலையாக
ஊருக்கெல்லாம் நிழல் தரும் குடும்பமென்னும் ஆலமரம். 
அன்பு செலுத்திடு சமமாக ,அரவணைத்திடு இதமாக,அறிவுரை கூறிடு பதமாக ஆதரவளித்திடு பலமாக ,ஏற்றத்தாழ்வுகள் பாராது ,வேற்றுமைகளை மறந்திடுகஒற்றுமையாக வாழ்ந்திடுக,உற்றதருணத்தில் உதவிடுக ,மற்றவர் உயர்வில் மகிழ்ந்திடுக. 
சுற்றங்களையும் அனுசரித்து குற்றங்குறைகளை மறந்திடுக சற்றே பொறுமை காத்திடுக மற்றவர் போற்ற வாழ்ந்திடுக.

கட்டுப்பாடு கடைபிடித்து கட்டுக்கோப்பாய் இருந்திடுக
விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே எட்டுத்திக்கும் புகழ் பரவும். 
நல்ல நிகழ்வுகளானாலும் அல்லவை நிகழும்போதினிலும் ,அவரவர் சூழ்நிலை என்னவென்று ஆராயாமல் வெகுளாதே, அனலென வார்த்தைகள் கொட்டாதே, சூழ்நிலை பிறகு மாறிவிடும்சுடுபட்ட மனம் என்றும் மாறாது.தண்ணீர் விட்டால் மரம் தழைக்கும் ,வென்னீர் விட்டால் கருகிவிடும்.உள்ளத்தில் வேண்டும் நிதானம் .உறவுக்கு அதுவே பிரதானம், புரிதல் உள்ள குடும்பமே புனிதமான சன்னிதானம்.சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்21.10.2021

News

Read Previous

துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா

Read Next

மின்கவி

Leave a Reply

Your email address will not be published.