ஆதரவற்றோர் யார்?

Vinkmag ad

ஆதரவற்றோர் யார்?
“”””””””””””””””””””””””””
தாயை இழந்த பிள்ளையா?
தந்தையை இழந்த பிள்ளையா?
தாய், தந்தையை இழந்தவர்கள்
ஆதரவற்றவறவர்களா? யார்?

உறவினர்கள் இல்லா
நிலையில் உள்ளவர்களா¿
இடரில் துணையாகும்
நண்பர்கள் இல்லாதாரா?

ஆதரவற்றோர். யார்?
ஈன்றவர்களை பாராமரிக்காதவரா?
முதுமையில் தனிமையில்
தவிக்க விட்டவரா?

ஆதரவற்றோர் இல்லங்களாய்
ஆங்காங்கே முதியோர்
இல்லங்களாய் இருப்பதற்கு
காரணமாய் இருப்பது யார் ?

தாய்ப்பால் பருகி
தாலாட்டு கேட்டு
வளர்ந்த குழந்தைகள்
மாற்றி காட்டுமா ?

தஞ்சை.ந.இராமதாசு

News

Read Previous

சிறுகதை – நீர்த் தாரை

Read Next

தனிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *