77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்

Vinkmag ad

             சென்னை வானொலியில் ஒலிபரப்பானது

77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்

             சென்னை வானொலியில் ஒலிபரப்பானது

ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த
      ஆகஸ்ட் 15 அன்று நாடெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
      சுதந்திரத் தினத்தையொட்டி சென்னை வானொலியில் சுதந்திர தின
      சிறப்புக் கவியரங்கம் கடந்த ஆகஸ்ட் 11 அன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது
      கவிஞர் மு.முருகேஷ் தலைமையில் ‘பட்டொளி வீசும் பாரதக்கொடி’ எனும்
     தலைப்பிலான சிறப்புக் கவியரங்கம், வானொலி நிலையத்தின் நாடக
     ஒலிப்பதிவரங்கம் – 1-இல் பார்வையாளர்கள் கூடிய அரங்கில் பதிவு
     செய்யப்பட்டது.
     இக்கவியரங்கில், ‘பட்டொளி வீசும் பாரதக்கொடி’ எனும் தலைப்பின்கீழ்,
     ‘கல்வியில்’ எனும் பிரிவில் கவிஞர் சா.கா.பாரதி ராஜா, ‘பெண் விடுதலையில்’
     கவிஞர் சா.ரஷீனா, ‘தொழில்துறையில்’ கவிஞர் வசீகரன், ‘அறிவியல் தொழில்
     நுட்பத்தில்’ கவிஞர் தயானி தாயுமானவன் ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.
     சிறப்புக் கவியரங்கத்தில் பங்கேற்ற கவிஞர்களுக்கு வானொலி நிலைய 
     இயக்குநர் டாக்டர் ஜெயா மகாதேவன் நினைவுப் பரிசுகளை வழங்கிக்
     கவுரவித்தார்.
     இந்நிகழ்வை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் அருணன்,
      காயத்ரி தேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
     இந்தச் சிறப்புக் கவியரங்கம் ஆகஸ்ட் 15 அன்று மதியம் 1 மணிக்கு சென்னை
     வானொலியின் விவித பாரதியிலும், மாலை 3 மணிக்கு பண்பலை
     வானொலியிலும் மறுஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

News

Read Previous

உலக யானைகள் தினம்

Read Next

உலக முதியோர் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.