முக்கிய வேண்டுகோள்!

Vinkmag ad

முக்கிய வேண்டுகோள்!
————————————
தமிழகத்தில் சில பள்ளிவாசல்களில்
வாடகை வசூல் ஆகாததாலும், சந்தா போன்றவை வசூல் செய்யவியலாததாலும்
ஜும்ஆ வசூல் செய்யாததாலும் என இவை போன்ற சில காரணங்களைக் காட்டி இமாம்கள், முஅத்தீன்கள், காவலர்கள் முதலானவர்களுக்கு மாதாமாதம் ஹதியாவாகத் தந்து வந்த தொகையைத் தராமலும் தொகையைக் குறைத்துத் தந்தும் வரப்படுகின்றமை மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் நிறைக்கிறது.

இறை இல்லச் சேவையாளர்களை இத்தகைய சூழலில்தான் அதிகம் அரவணைக்கப் பள்ளிவாசல் நிர்வாகிகள் பெரிதும் கடமைப்பட்டவர்கள். ஆகவே நிர்வாகிகள் தங்களுக்குள்ளாகவே பகிர்ந்து ஏற்றுக்கொண்டோ அல்லது முஹல்லா பெருமனக்காரர்களிடம் பெற்றோ உடனடியாக இமாம்கள், முஅத்தீன்கள், மற்றும் பிற பணியாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையைத் தந்து உதவவும்,
ஆண்டுதோறும் அளித்து வரும் ரமளான் அன்பளிப்புத் தொகையை இந்த ஆண்டு 4 (நான்கு) மாதங்களுக்கான தொகையாகச் சேர்த்து மொத்தமாக ரமளான் ஆரம்பத்திலேயே வழங்கி உதவவும் பள்ளி நிர்வாகிகளையும், ஜமாஅத் பொறுப்பாளர்களையும்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் மிகுந்த பணிவன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

– பேரா. டாக்டர் சேமுமு. முகமதலி
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

News

Read Previous

மனிதா

Read Next

லைக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *