கார் கலைக் களஞ்சியக் குழந்தை

Vinkmag ad
santhosh
“கார் கலைக் களஞ்சியக் குழந்தை” என்ற தலைப்பில்
இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று தமிழக சிறுவன் சாதனை
“கார் கலைக் களஞ்சியக் குழந்தை” என்ற தலைப்பில் இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணா என்ற 8 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
இவரது தந்தை தண்டாயுதபாணி இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தாயார் கார்த்திகா இல்லத்தரசி.
இவர்களுடைய மகன் சந்தோஷ் கண்ணா என்ற 8 வயது சிறுவன் “கார் கலைக் களஞ்சியக் குழந்தை” என்ற தலைப்பில் இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சிறுவன் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2021ம் ஆண்டில் இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் ” கார்களின் கலைக் களஞ்சியக் குழந்தை” என்ற தனித்தலைப்பில் இடம் பெற்றுள்ளார்.
இவர் 100க்கும் மேற்பட்ட கார்களின் பெயர், நிறுவனம் மற்றும் பாடி டைப், ( ஹேட்ச் பேக், செடான், எஸ்யூவி, எம்யூவி, டிரக், மற்றும் மினிவேன் போன்ற விவரங்களை பார்த்தவுடன் கூறும் தன்மையுள்ளவர்.
கார்களின் எரிபொருள் தன்மை, டிரான்ஸ்மிசன் டைப், கார் வீல் டைப் கார் வீல் டிரைவிங் டைப், குளோபல் என்கேப் அப்ரிவியேசன் மற்றும் லொகேசன் அதனுடைய அதிக பட்ச ஸ்கோர், ஸ்டார் மற்றும் இந்திய அளவில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்திய கார்கள், 2021 ம் ஆண்டின் புதிய கார்கள் போன்ற விவரங்களை கூறி ” இந்திய புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்தும் பெருமை சேர்த்துள்ளார் இந்த மாணவர்.
இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்துள்ள சிறுவனுக்கு நமது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களை தெரிவிக்க :
தந்தை தண்டாயுதபாணி : +91 94423 20020
E mail : santhoshpani12@gmail.com

News

Read Previous

வாக்காளர் கடமை

Read Next

மின் பாடம் தயாரிக்க ……….

Leave a Reply

Your email address will not be published.