வாக்காளர் கடமை

Vinkmag ad

வாக்காளர்  கடமை 

காலில்  விழுந்து  பிழைப்பை நடத்துவோர்
காலை வாரிப்   பிழைப்பை நடத்துவோர்
குற்ற  வழியில்   பிழைப்பை நடத்துவோர்
குற்றம்  சொல்லியே பிழைப்பை நடத்துவோர் ..
பழம்பெருமை பேசிப்  பிழைப்பை நடத்துவோர் .
பழயதைக் கிண்டியே பிழைப்பை நடத்துவோர்.
குட்டையைக் குழப்பி பிழைப்பை நடத்துவோர்
குறுக்கு வழியில் பிழைப்பை நடத்துவோர் .
கூட்டணி  சேர்ந்து பிழைப்பை நடத்துவோர் .
கூட்டணி  உடைத்து பிழைப்பை நடத்துவோர் .
கொள்கை என்று உரைப்பார்  ஒருநாள்
கொள்கை தன்னைத்  துறப்பார்  மறுநாள்
கொள்கை ஒன்றே இவர்களுக்கெல்லாம்
கொள்ளை அடிப்பது மக்கள் பணத்தை ..
இலவசம் கொடுத்து இசைந்திடச் செய்வார்
பல வேஷம் போட்டு பல்லை இளிப்பார் .
நோட்டுகள்   கொடுத்து ஓட்டுக்கள் வாங்கி
போட்ட பணத்தைப் பெருக்கிடச் செய்வார் .
சான்றிதழ் வழங்கிட  லஞ்சம்  பெறுவார்
சாலைகள் போடக்  கமிஷன் பெறுவார் .
வேலைக்கமர்த்த  , வேற்றிடம் மாற்றிட
நடவடிக்கைகள்  எடுக்காதிருக்க
விசாரணைகள் நீர்த்துப் போக
எல்லாவற்றிற்கும்  விலையொன்றுண்டு .
வீடு கட்ட செங்கல் குவித்தால்
வார்டு மெம்பெருக்கு கப்பம் வேண்டும்.
திட்ட அனுமதிக்கு லஞ்சம் உண்டு .
தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம் உண்டு
மின் இணைப்புக்கும்  லஞ்சம் உண்டு .
லஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டால்
வீடும் கட்ட முடியாது -இவர்களுக்கு
ஈடும் கட்ட முடியாது .
காவல் துறை இவர்கள் ஏவல் துறையாம்  .
நீதித்துறையோ  நெடிய  பயணம் .
ஜனங்களை நாயாய் அகத்தில் நினைப்பதே
ஜன நாயகம் என்று  ஆனது காணீர் .
சாதி ,இனம், மொழி , மதபேதமின்றி
நீதி வழி நிற்கும் நல்லவர்களை
தேர்தலில்  ஒட்டுக்குப் பணம் வாங்காமல்
தேர்ந்தெடுக்கும் மன  நிலை ஒன்றே -நாம்
தேர்ந்தெடுக்க வேண்டிய வழியாகும் – கற்றுத்
தேர்ந்திடுவோம் இந்த  படிப்பினையை .
சேது சுப்ரமணியம்.

News

Read Previous

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

Read Next

கார் கலைக் களஞ்சியக் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *