மட்டன் பிரியாணி

Vinkmag ad
நோன்பு -1
இஸ்லாமிய சமையல்-1
அஸ்ஸலாமு அலைக்கும்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
இஸ்லாமிய சமையல் எனும் தலைப்பின் கீழ் ரமலான் மாதம் முழுதும் தினம் ஒரு இஸ்லாமிய சமையல் குறிப்பினை இங்கு பதிவிட எண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ்…
காயல் பட்டிணத்தில் பிரபலமான சமையல் வகைகளை அன்பு சகோதரி ஃபாயிஷா காதர் அவர்களின் குறிப்புகளை அவரது அனுமதியுடன் இங்கு வழங்குகிறேன்.
கடந்த 6×7 வருடங்களாக அறுசுவை தளத்திலிருந்தே எனக்கு அறிமுகமானவர். சிறந்த சமையல் வல்லுனர். சமையல் கலையில் மகாராணி என்று கூட சொல்லலாம். அவருக்கு என் முகநூல் வட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்..
ரமலானில் ஸஹர் வேளை உணவுக்கும், பெருநாள் போன்ற விஷேச நாட்களிலோ இவ் வகையான சமையலை சமைத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்களேன்.
வெளி நாடுகளில் தனிமையில் வசிக்கும் நண்பர்களும் இதை செய்து பார்க்கலாமே!
மட்டன் பிரியாணி (குக்கர் முறை)/ Mutton Biryani ( Cooker Method)
தேவையான பொருட்கள்:
மட்டன்- 1/2 கிலோ
பாஸ்மது அரிசி- 1/2 கிலோ
பல்லாரி வெங்காயம்- 3
தக்காளி- 3
இஞ்சி பூண்டு விழுது- 3 மே.கரண்டி
தயிர்- 150 மில்லி
பச்சை மிளகாய்- 5-6
தனி மிளகாய்த்தூள் 1 மே.கரண்டி
மஞ்சள்த்தூள்- 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – 1/2 கட்டு
எலுமிச்சை பழம்- 1
உப்பு- தேவைக்கு
தேங்காய்பால் அல்லது பசும் பால்- 1/4 கப்
நெய்- 200மில்லி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை – தலா 2 – 3
முந்திரி,பாதம் – விருப்பம் இருந்தால் அலகரிக்க
Method
Step 1
பாஸ்மதி அரிசியினை நன்றாக தண்ணீர் விட்டு அலசி 20 – 30 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் ஊற வைக்கவும்
Step 2
குக்கரில் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை போடவும். பிறகு நீட்டமாக நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு பொன் நிறத்தில் வதக்கவும். வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் நன்றாக குறைந்த தணலில் வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி நீட்டமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். மூடி போட்டு சிம்மிலே தக்காளி கனிய விடவும். பிறகு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
Step 3
நன்றாக வதங்கிய பிறகு சுத்தம் செய்த இறைச்சி துண்டுகளை போடவும் இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கிண்டிவிடவும். மசாலா இறைச்சியில் நன்றாக கலந்த பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவை சேர்க்கவும். நன்றாக கிண்டி மட்டன் வேகும் வரை வேக வைக்கவும்
Step 4
மட்டன் வெந்த பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்னே கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது கால் கப் பால் பால் ஊற்றவும். இதனுடன் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை சுத்தமாக வடிகட்டிவிட்டு அரிசியினை சேர்க்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கரண்டி வைத்து கிண்டிவிட்டு ஒரு வீசில் மட்டும் வைத்து இறக்கவும் .. விரும்பினால் மேலே முந்திரி , பாதம், கிஸ்மிஸ் நெய்யில் வறுத்து மேலே தூவி அலகரிக்கலாம்
Step 5
கம கம மணத்துடன் சூவையான ஈசியான மட்டன் பிரியாணி ரெடி.. தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Step 6
டிஸ்கி: குக்கர் வீசில் அடங்கிய பின்பு உடனே குக்கரை திறக்க வேண்டாம் 15 நிமிடங்கள் கழித்து வேறு ஒரு பாத்திரத்தில் பிரியாணியினை மாற்றிவிடவும். பிரியாணியினை மர கரண்டி அல்லாது பிளாஸ்டிக் கரண்டியால் பிரட்டவும். அதிகம் பிரட்டினால் சாதம் உடைந்து குழைந்தது போல் இருக்கும்.
நன்றி:ஃபாயிஷா காதர்
Engr Sulthan

News

Read Previous

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்ற உதவுமாறு ஆட்சியரிடம் தாய் கோரிக்கை

Read Next

சக்கரவர்த்தியின் மனைவி

Leave a Reply

Your email address will not be published.