பைனாப்பிள் கஸ்டட் வித் அகர் அகர்

Vinkmag ad
IMG-20160530-WA0010[1]கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .
இதே கொஞ்சம் இன்னும் ரிச்சாக பழங்கள் சேர்த்து கஸ்டடாக செய்து அதில் அகர் அகரை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
குழந்தைகளுக்கும் கொண்டாட்டாம் தான்.
இந்த கோடை வெயிலுக்கு சாப்பாட்டிற்கு பதிலாக கூட இதை இரண்டு கப் சாப்பிடலாம். நல்ல பில்லிங்காக இருக்கும்.
தேவையான‌வை

 

பால் –  அரை லிட்டர்
க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் – ஒன்னறை மேசை கரண்டி
பாத‌ம் ஃபிளேக்ஸ் – ஒரு மேசை க‌ர‌ண்டி
ஸ்வீட்டன்ட் கன்டெஸ்ட் மில்க் – அரை கப்
வாழைபழம் –   ஒன்று பெரிய‌து
ஆப்பில்  – கால் கப் துண்டுகளாக வெட்டியது
பச்சை வண்ண ஜெல்லி அ கடல் பாசி – வேண்டிய வடிவில் கட் செய்தது.
குங்குமப்பூ – சிறிது

 

செய்முறை
பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும்.
சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும்.
கண்டெஸ்ட் மில்க்  , பாத‌ம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும், கைவிடாம‌ல் கிள‌ற‌வும், க‌ட்டியாகி வ‌ரும், அப்ப‌டியே ஆற‌விட்டு குளிற‌விட‌வும்.
குளிர வைத்த கஸ்டடில் வெட்டிய பழவகைகளை ( ஆப்பிள் மற்றும் வாழைப்பழம்) சேர்த்து கலக்க்கவும்.

குறிப்பு:

இத‌ பார்ர்டியில் வைத்தாலும் க‌ல‌ர்ஃபுல்லாக‌ இருக்கும்.
வாழை [பழம் அரிந்த‌தும் க‌ருத்துவிடும், க‌ருத்து போகாம‌ல் இருக்க‌ அரிந்த‌து சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம்.
உட‌னே சாப்பிடுவ‌தாக‌ இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை

 

வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்…..தான் போங்க‌
Jaleelakamal

News

Read Previous

தெய்வமே தாயாவாள் !

Read Next

கவிதாஞ்சலி!

Leave a Reply

Your email address will not be published.