இறால் கொழுக்கட்டை!

Vinkmag ad

இறால் கொழுக்கட்டை!

காயல் பாரம்பரிய உணவு வகையில் இந்த இறால் கொழுக்கட்டையும் ஒன்று

Ingredients

அரிசிமாவு – 1 கப்
தேங்காய் பூ – 1/4கப்
உப்பு – தேவைக்கு
மஞ்சள்த்தூள் – 1/4ஸ்பூன்
கறிமசாலாத்தூள் – 1/2 டே.ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
ஒரு பவுலில் பரும் அரிசி மாவினை போட்டு மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

உள் அடக்கம்:
பல்லாரி வெங்காயம் – 2
சின்ன இறால் – 150 கிராம்
மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
கீரைப்பொடி – 2 டே.ஸ்பூன்
தனிமிளகாய்த்தூள் – 1 டே.ஸ்பூன்
மாசித்தூள் – 1 டே.ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தேங்காய் பூ – 5-6 டே.ஸ்பூன்
எண்ணெய் – 2-3 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 1

Method

Step 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கிய பிறகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.

Step 2
வெங்காயம் நன்றாக கனிந்த பிறகு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு , இறால் , தேங்காய் பூ சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு வதக்கவும். மூடி போட்டு வேக வைக்கவும்.

Step 3
ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் சுண்ட வதக்கவும். அடுப்பில் இருந்து வாணலியினை இறக்கிய பிறகு கீரைப்பொடி மற்றும் மாசித்தூள் சேர்த்து கிளறிவிடவும். இந்த கலவையினை ஆற வைக்கவும்

Step 4
இந்த கலவையினை ஊற வைத்த அரிசி மாவில் சேர்த்து நன்றாக கைகளை வைத்து பிசைந்து மிடியம் அளவு உருண்டைகளாக செய்யவும். ( எங்கள் வீட்டில் எங்க கம்மா (பாட்டி) இந்த இறால் உருண்டை நான் செய்த உருண்டையின் அளவினை விட மூன்று மடங்கு பெரிசாக செய்வாங்க.. காயல் நகரிலும் பல வீடுகளில் இந்த உருண்டைகளை பெரிசாக தான் செய்வார்கள்)

Step 5
இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் இந்த உருண்டைகளை வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும் சுவையான இறால் கொழுக்கட்டை ரெடி…
நன்றி. ஃபாயிஷா காதர் kayalsamayal.com

News

Read Previous

நான்காவது நக்கீரர் குலாம் காதிர்

Read Next

உலகெங்கும் முஸ்லிம்கள் எவ்வளவு நேரம் நோன்பு நோற்கின்றனர் ?

Leave a Reply

Your email address will not be published.