ஹைக்கூ கவிதைகள்

Vinkmag ad

ஹைக்கூ கவிதைகள்

கணினி

பிச்சை கேட்டது

விவசாயிடம் ………..

 

கூட்டு குடும்பத்தை

தனி குடும்பமாக பிரித்தது

குடும்ப அட்டை ……….

வெள்ளி விளக்கு

சிலவர் குடம்

வறுமை கோட்டிற்கு கிழ்

மக்கள்

இன்றைய ஜனநாயகம் ……..

 

நான்

உடைந்ததால் சிரித்தேன்

கண்ணாடி …………..

 

மின்னல் ஒலி

இலவச மின்சாரம்

உழவனுக்கு ………….

 

 

வயதான

பெற்றோருக்கு

தண்ணிர் கொடுப்பவள்

மகள் ………

தெருக்கு தெரு

கட்சிக் கொடி

தாலிகோடி

முழ்கியதால் ………..

முழு நிலவு

உடைந்தால்

மூன்றாம் பிறை ………….

 

பூக்கள்

தற்கொலை

செயுதுக்கொண்டது

அலுவலக

நாகரிகம் …………….

 

 

 

வெளியில் இருந்து

குழிக்குள் மரணம்

குழிக்குள் இருந்து

வெளியில் ஜனனம்

விதை ………..

நச்சையும் வளர்க்கும்

நஞ்சையும்  வளர்க்கும்

விஞ்ஞானம் …………..

 

என்றும் அன்புடன்

ரா.ந .ஜெயராமன் ஆனந்தி

கீழப்பெரம்பலூர்

கைபேசி இலக்கம்:00971507258518

 

jaianathi@gmail.com

 

 

 

 

 

 

 

 

News

Read Previous

சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டண பட்டியலை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Next

ஆட்டோ கட்டணம்: விழிப்புணர்வு பணிகள் தீவிரம்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்

Leave a Reply

Your email address will not be published.