ஆட்டோ கட்டணம்: விழிப்புணர்வு பணிகள் தீவிரம்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்

Vinkmag ad

புதிய ஆட்டோ கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து போலீஸாரும் தீரிவரப்படுத்தியுள்ளனர்.மேலும் இந்த கட்டணம் தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்துத் துறை வடக்கு மண்டலத்தை 044 – 26744445 என்ற தொலைபேசி எண்ணிலும், தெற்கு மண்டலத்தை 044 – 24749002 எண்ணிலும் தொடர்புகொண்டு 24 மணி நேரமும் பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.பயணிகளின் வசதிக்காக புகார் தெரிவிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுடன் போச்சு நடத்தி வருகிறோம். இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோக்களிலும் அச்சிடப்படும் என போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகர ராவ் கூறினார்.

News

Read Previous

ஹைக்கூ கவிதைகள்

Read Next

ரெயில் எண்கள் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.