ஹாஜிகளே வருக !

Vinkmag ad
 (பி. எம். கமால், கடையநல்லூர்)
உயிரோடு கபன்  அணிந்து 
ஒத்திகை பார்த்துவிட்டு 
புதிய பிறப்பெடுத்த 
புனிதர்களே வருக !
ஜம் ஜம் நீரினால் 
உடலையும் குடலையும் 
அலசிக் கழுவிவிட்டு 
பூரண சுகத்தோடு 
புறப்பட்டு வருவோரே 
வருக ! வருக !!
 
 
“சரணடைந்தேன் 
உன்னிடத்தில் 
சமத்துவத்தின் சாகரத்தில் 
சங்கமித்தேன்” என்று 
சப்தமிட்டு முழங்கியவரே !
வருக ! வருக !!
 
கண்ணீரால் பாவத்தைக் 
கழுவிக் கரைத்துவிட்டு 
அல்லாஹ்வின் கருணைக் 
கடலில் கலந்துவிட்ட
 நதிகளே!வருக ! வருக !!
 
 
புறங்கூறும் தூசிகளைப் 
புறந்தள்ளிவிட்டு நீங்கள் 
கைகளில் ஒட்டியிருந்த 
வட்டி நஜீசையும் 
வழித்தெறிந்து விட்டீர்கள் !
 
இப்போது உங்கள் 
நாவுகளும் கைகளும் 
சுவனத்து மாளிகையின் 
சுடர்விடும் தீபங்கள் !
 
தீபச் சுடரேந்தி 
திரும்பி வருவோரே !
உங்கள் 
உள்ளங்களில் மட்டுமல்ல-
இல்லங்களிலும் 
சுடரேற் றுங்கள் !
 
ஹாஜிகளே ! நீங்கள் 
உங்களையே மத்தாக்கி 
ஒருவனின் திருவீட்டு 
முற்றத்துக் கடலில் 
அருளமுதம் கடைந்தீர்கள் !
 
கடைந்த அமுதத்தை 
கல்புகளில் ஏந்தி 
உடைந்த உள்ளத்தை
ஒ ட்டிச் சரிசெய்து
வருகின்ற ஹாஜிகளே 
வருக ! வருக !
மினாவில் கல்லெறிந்து 
விரட்டிய சாத்தான் 
கனாவிலும் வந்து 
கைகோர்க்க எண்ணுவான் !
விடாதீர்கள் ! அவனை 
அனுமதித்து விட்டால் 
நீங்கள் 
வாங்கிய பட்டம் 
 வா ன த்தில் பறந்துவிடும் !
அது-
படித்து வாங்கிய பட்டமல்ல 
உள்ளத்தை ஒருவனிடம்
பதித்து வாங்கிய பட்டம்
அல்லவா ? 
தோல்வி மூட்டைகளைத் 
தோள்களில் சுமந்துசென்று 
அரபாத் வேள்வியில் 
அள்ளி எறிந்துவிட்டு 
வெற்றி விருதுகளோடு 
விரைந்து வருகின்ற 
ஹாஜிகளே ! வருக !
கள்ளி இலைகளாய்
க ஃ பாவுக்குச் சென்று 
தாமரை இலைகளாய் 
தரஉயர்வு பெற்று 
பாவத்தில் ஒட்டாமல் 
பாருகில் வாழுதற்கு 
பக்குவம் பெற்றோரே 
பணிவோடு வருக !
 
கடல்கடந்து உடல்வருத்தி 
திடல் வெளியில் வியர்வை 
முத்துக் குளித்து 
சிப்பிகளை அல்ல 
ஆணிமுத்துக்களை 
அள்ளிவரு கின்றோரே 
வருக ! வருக !
 
உல்லாசப் பயணமாய் 
எண்ணாமல் ஹஜ்ஜை 
அல்லாஹ்வின் வீட்டுக்கு 
அருளமுத விருந்துண்ண 
எண்ணிச் சென்றோரே !
ஏற்றமுடன் வருக !
ஹாஜிகளே ! நீங்கள் 
சலவை செய்யப்பட்ட 
வெண்ணிற ஆடைகள் !
அதில் 
கடுகு விழுந்தாலும் 
கடலாகத் தெரியும் !
எச்சரிக்கை !
ஜம்  ஜம் சந்தனம் 
ஒட்டிய கைகளை 
பாவச் சாக்கடையில் 
முக் கிவிடாதீர்கள் !
ஹாஜிகளே ! உங்கள் 
மனவீடுகளில் மண்டிக் கிடந்த 
குப்பைகளை அள்ளி 
எறிந்துவிட் டீர்கள் !
இனி 
தூசிகளை அங்கே 
தூங்கவிடா தீர்கள் !
பிள்ளைகளாய்ப்  புதிய
பிறப்பெடுத்த ஹாஜிகளே !
மழலைகளாய் மறுபடியும் 
மறுவாழ்வு துவங்க 
மனங்கொண்டு நீங்கள் 
மகிழ்வோடு வருக !

 

__._,_.___
pmkamal28@yahoo.com

News

Read Previous

காமா மகன் சித்திக் வஃபாத்து

Read Next

தமிழியல் கடலியல் ஆய்வுகள் – Part II

Leave a Reply

Your email address will not be published.