மயிலிறகு மனசு

Vinkmag ad
இன்னும் நீ
என்னை பார்ப்பதாக
இன்னும் நீ
என்னை
தொடர்வதாக
இன்னும் நீ
என் எழுத்துக்களை
வாசிப்பதாக
இன்னும் நீ
என்னை
நேசிப்பதாக
இன்னும் உன்
இதழ்களில்
என் உள்ளங்கை குளிர்மை
ஒட்டியிருப்பதாக
நம்பிக்கொண்டுதானிருக்கிறேன்
எல்லா நம்பிக்கைகளையும்
ஒரு அழைப்பில்
ஒரு செய்தியில்
நிரூபித்துக்கொள்ளலாம்தான்
ஆனாலும்
தேவையில்லை
எந்தன் இச்சிறுவாழ்வில்
இதுவொன்றும்
பெரும்மாற்றங்களை
ஏற்படுத்திவிடப்போவதில்லையே
என் நம்பிக்கைகளில்
நீ இருப்பதால்
புதிதாய் எதையும்
இழப்பதற்குமில்லை
என்
நம்பிக்கைகளில் நீ
இருந்துவிடுவதால்
புதிதாய் எதையும்
பெறுவதற்குமில்லை
நம்பிக்கைகளை
தேடித்தொலைவதில்
இப்போது ஆர்வங்களுமில்லை
ஆகவே
நீ
என்
நம்பிக்கைகளிலேயே
இருந்துவிடு.
மயிலிறகு மனசு ஷிஃபானா

News

Read Previous

வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம்

Read Next

இஸ்லாமிய இலக்கியக் கழகம் – கருத்தரங்கம் – 33

Leave a Reply

Your email address will not be published.