புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Vinkmag ad
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
 
அன்பின் ஊற்றுக்கண் என்றென்றும் திறந்திருக்க வாழ்த்துக்கள்!
இன்பப் புன்னகை என்றென்றும் கனிந்திருக்க வாழ்த்துக்கள்!
 
உள்ளமும் உதடுகளும் ஒரே மொழி பேச வாழ்த்துக்கள் !
அள்ள அள்ளக் குறையாத ஆர்வம் பொங்க வாழ்த்துக்கள்!
 
வாசிப்பின் சுவை பெருக மனமுருக வாழ்த்துக்கள்!
நேசிப்பின் ருசி தழைக்க நெஞ்சினிக்க வாழ்த்துக்கள்!
 
யாரும் எவர்க்கும் இணையென்றே இசைந்திருக்க வாழ்த்துக்கள்!
ஊரெனில் எல்லாம் ஒன்றென்றே ஏற்றிருக்க வாழ்த்துக்கள்!
 
செம்புலப் பெயனீர்போலே அன்புடை நெஞ்சு கலந்திருக்க வாழ்த்துக்கள்!
ஐம்புலன் முழுக்க அன்பே முகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்!
 
தம்மின் இளையர் அறிவு ஆற்றல் மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்!
தம்மின் இளையர் நமைத் திருத்தத் தவம் கிடக்க வாழ்த்துக்கள்!
 
முன்னேர் உழவர் மூத்தோர் மதித்திருக்க வாழ்த்துக்கள் !
எந்நேரமும் பிறர்க்காய் நினைப்போர் உயர்ந்திருக்க வாழ்த்துக்கள்!
 
சிற்றஞ் சிறுகாலை எழுந்தியங்கி உழைத்தினிக்க வாழ்த்துக்கள்!
சுற்றம் நட்பு கொண்டாடி நெகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்!
 
எந்தப் புத்தாண்டும் தவறாது வாழ்த்தனுப்பும் இனியோர்க்கு வாழ்த்துக்கள்!
விந்தை புதுமை வியப்பைப் பகிர்வோர் சிறந்திருக்க வாழ்த்துக்கள்!
 
பத்துவித பரிசினும் புத்தகம் கொடுத்துப் பயன்பெருக்க வாழ்த்துக்கள்!
கொத்துமலர் போல்சிரித்துக் கொண்டாட்ட உளவியலில் தினம்குளிக்க வாழ்த்துக்கள்!
– எஸ் வி வேணுகோபாலன் 

News

Read Previous

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read Next

இறைவனிடம் இறைஞ்சி நிற்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *