புத்தாண்டு வாழ்த்துக்கள்

Vinkmag ad

புத்தாண்டு வாழ்த்துக்கள்
—————————————

எழுபதுகளில்தோன்றிய
என் வாழ்வை இன்றுவரை தொடர்ந்திட ஆசிர்வதித்த
இறைவனுக்கு நன்றி…..

தனிமரமான என்னைச்
சூழ்ந்து தோப்பாக்கி
வீழ்ந்துவிடாது
தோள் கொடுக்கும்
உறவுகளுக்கு நன்றி….
மதிப்பற்ற பூஜ்ஜியம் நான், எனது
முன்னும் பின்னும் இணைந்து
மதிப்புள்ள
பூஜ்ஜியமாக மாற்றிய
ஆசிரியர்கள், நட்புகள், மாணவர்கள்
அனைவருக்கும் நன்றி…..

சந்திரனும் களங்கமென்று சொல்லும்
சரித்திரம் படைத்த உலகமிதில்
சரியா ? தவறா ? என தெரியாமல்
செய்த பிழைகள் என்னிடம் இருக்கலாம்

மாவீரன் வாலியை
மறைந்திருந்து கொன்ற
ராமாயண ராமனுக்கு கம்பன் எழுதியவரியை கடன் பெற்று
கருத்து மாறாமல் சொல்கிறேன்
” நீர் இது பொறுத்தருள்க”…..
எனது வாழ்க்கை பயணத்தில்
எத்தனையோ
தக்கார், தகவிலார்
என்னுடன் பயணித்தனர்

தக்கார் வழி காட்டினர்
தகவிலார் பாடம் புகட்டினர்

இருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்

இருவருக்கும் நன்றி….

புதுவருடம் 2019

உங்கள் வாழ்வில்

புது மலர்ச்சியை

புது வசந்தங்களை

புது நம்பிக்கையை

புது வாய்ப்புகளை

வழங்கட்டும்

புத்தாண்டுவாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்…

பா.திருநாகலிங்க பாண்டியன்

மதுரை.

News

Read Previous

ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடந்தது என்ன???

Read Next

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *