பசி தாகம் உறக்கம்

Vinkmag ad

பசி தாகம் உறக்கம்
பசி தாகம் உறக்கம்..
அத்தனை உயிர்களுக்கும்
இறைவனால் வகுக்கப்பட்ட
சுழற்சி முறை திட்டம்.

தவிப்பவனுக்கு தெரியும்
தாகத்தின் தாக்கம்
பசித்தவனுக்கு தெரியும்
புசித்தலின் அருமை
களைத்தவனுக்கு தெரியும்
கண்ணுறக்கத்தின் மகிமை

பசியும் தாகமும் உறக்கமும்
மண்ணுயிர்க்கெல்லாம்
மன்னவன் இட்ட கட்டளை..
இம்மூன்றும் இல்லையேல்
என்ன இருந்தும் என்ன பயன்..

உண்டது செரிக்கவும்
குடித்தது வெளியேறவும்
படுத்ததும் உறங்கவும்
வாய்த்தவர் பாக்கியசாலிகள்

பசித்தோர்க்களிக்கும் உணவு
இறுதி மூச்சடங்க புகட்டும் நீர்
அலுப்பால் ஆழ்ந்த உறக்கம்
இவைக்கேது ஈடிணை..

இருந்தும் இல்லாது தவிப்போர் பலர்
இதற்கெல்லாம் விலைகொடுத்து வாழ்வோர் பலர்
அவர் நிலை குறித்து நினைத்தாலே போதும்
ஆண்டவனின் அருள் பெற்றவர் நாம்..
– முஹம்மது ரபீக்

News

Read Previous

காதல் செய்யும் நேரம் இது

Read Next

துடியன்ன இமைகள் காட்டுதி

Leave a Reply

Your email address will not be published.