நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
(பக்கம் 146-149)
 
கடைசி வரைக்கும் கதீஜா !
பின்னர் ஒரு நாள்
ஆயிஷா பிராட்டியோடு
அண்ணலும் வாழ்ந்தபோது
கதீஜா அம்மையின்
கவனம் வந்தது …
இருண்ட மேகங்கள்
அவர் –
முகமுற்றத்தில் திரண்டன !
கண்களாம் படித்துறையில் …
நீர்முத்துக்கள்
நிமிர்ந்தன !
நாயகமே !
கதீஜா முதிர்ந்தவர்கள்
அவர்களிலும் சிறந்தவரை
அல்லாஹ் உங்களுக்கு
அருளவில்லை?
என்றே கேட்டார்கள்
எழிலரசி ஆயிஷா …
நாயகமோ
நவின்றார்கள் …
இல்லவே இல்லை
ஒருபோதும் இல்லை
மேவிய நீரில்
மிதந்தன கண்கள் !
நாயகம் தொடர்ந்தார் …
ஏழையாய் இருந்த
என்னை மணந்தார் கதீஜா
பட்டமரம் துளிர்த்தது …
பாலைவனம் செழித்தது …
கெட்டகுடி சிறந்தது …
நட்ட நிசி விடிந்தது …
அவரது செல்வம்
அனைத்தையும் திரட்டி
நான் –
விரும்பிய வண்ணம்
வழங்கலாம் என்றார்!
நபிகள் என்றே
நான் ஆன நாளில்
பொய்யன் என்றே
புகன்றனர் மக்கள்.
அலைகளின் நடுவில்
அசையாப் பாறையாய் …
கதீஜா இருந்தார் !
அந்த –
இருட்டுப் பொழுதில்
வெளிச்சம் ஏற்றிய
விழுதுகள் அவரது
விரல்கள் ஆகும்!
என்னை –
நபிகள் என்று
முதன்முதலாக
நவின்ற பெண்மணி
கதீஜா நாச்சியார் …
தேகமே
சந்தேகமாகத்
திரண்ட நாளில் – என்னை
நபிகள் என்றே
முழுக்க முழுக்க
நம்பிப் போற்றிய
எழுநிலை மாடம்
கதீஜா பிராட்டி !
வியர்வை நதிகள்
வீங்கிய போதே …
மழையின் வரவை
மனதில் எழுதிய
மாதவச் செல்வி –
அரபு நாட்டில் உயிரும் மெய்யும்
எதிர்த்த போது …
எனக்கென நின்ற
ஆயுத எழுத்து !
கதீஜா மூலமே …
நாயகத்தார்க்கு
குழந்தைகள் பிறந்தன.
ஐவரில் நால்வர் …
அழகிய பெண்கள்
சின்ன வயதில்
உதிர்ந்தவர் ஆண்மகன் !
பாத்திமா என்பவர்
பெண்களில் ஒருவர்.
விதவை ஒருத்தியை
வதுவை செய்தார்
நபிகள் பெருமான்.

News

Read Previous

சூடேறும் பூமி

Read Next

முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ

Leave a Reply

Your email address will not be published.