நானும் கவிதையும்

Vinkmag ad

நானும் கவிதையும்
 
கவிதை அழைத்ததால் எழுதி வந்தேன்
கவிதை – கேட்டதால் சொல்ல  வந்தேன்
கவிதை என் தமிழ்த்தேன்
கவிதை – சொல்லி உனை அழைத்தேன்
கவிதை கேட்பாய் என நினைத்தேன்
கவிதை – நெஞ்சில் எனை விதைத்தேன்
கவிதை உன்னில் மரமென முளைத்தேன்
கவிதை – அழைத்ததும் வானில் மிதந்தேன்
கவிதை பறவை என்று நினைத்தேன்
கவிதை – விழியில் சிக்காமல் பறந்தேன்
கவிதை மழையாய் பொழிய நினைத்தேன்
கவிதை – தென்றலாய் உன்னை வந்தடைந்தேன்
கவிதை நீயா? நானா? என்று மொழிந்தேன்
கவிதை – வீறு கொண்டு எழுந்தேன்
கவிதை புகழ்ந்தவரை கண்டு வியந்தேன்
கவிதை – உனை கவர்ந்து சாதித்தேன்
கவிதை நீயம் நானும் மலைத்தேன்
கவிதை – உனைகண்டு நான் மலைத்தேன்
                                
                                  – சேக் முகமது அலி 
 


Sheik Mohamed Ali
General Manager
Aaliya Health Foundation L.L.C
P.O.Box: 4749
Ajman. U.A.E

smasheik@gmail.com

News

Read Previous

மாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா

Read Next

தோல்வியும்! வெற்றியும்!

Leave a Reply

Your email address will not be published.