தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

Vinkmag ad
தினமும் தூங்கியும் பொழுது போகலை..!
எங்கும்போகலை எதையும் பார்க்கல 
எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை
தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய்
தினமும் தூக்கியும் பொழுது கழியிலே
கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை
காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே
உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும்
ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை
கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைக்கலை
கொண்ட உறவும் நீண்ட பிரிவால்
கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்
 கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை
எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை
எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை
சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட-
சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை
எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை
ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை
சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில்
செலவு செஞ்சிட பணமும் கையில்லை
கவியாழி.கண்ணதாசன்
27.06.2020

News

Read Previous

மொழி என்பது மனிதவுடைமை..!

Read Next

அது

Leave a Reply

Your email address will not be published.