தினத்தந்திக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

Vinkmag ad

அமீரகத்தில் கால் பதித்துள்ள

எங்கள் தினத்தந்திக்கு

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

 

விடிந்தும் விடியாமலும் தந்திபோல்

விரைந்து வரும் எங்கள் தினத்தந்தி!

அனைத்து அன்றாட வேலைகளும்

ஆகிவிடும் உனக்குப் பிந்தி!

 

வாழ்வுதேடி வந்த இடத்தில்

உன்னைப் பிரிந்து வாடினோம்!

வாட்டத்தைப் போக்கிக்கொள்ள

வழிகள்பல தேடினோம்!

 

எத்தனையோ இதழ்களில்

அடைக்கலம் நாடினோம்!

எதிலும் மனம் லயிக்காமல் விதி

எனும் பாதையில் உருண்டோடினோம்!

 

தாய் வீட்டு சீதனமாய்

தரணிபோற்றும் சஞ்சிகையாய்

கடல்கடந்து கால்வைத்து அமீரகம் வந்தாய்!

கவலையுற்ற நெஞ்சுக்கு ஆறுதல் தந்தாய்!

 

தமிழர் வாழ்வில் நீங்காத அங்கம் – நீ

நவீன காலத்து முத்தமிழ்ச்சங்கம்!

 

அன்னைத்தமிழில் வாசிப்பு – நீ

அள்ளித்தரும் அன்னையின் அரவணைப்பு!

எளிமையான தமிழில் உன் படைப்பு!

படிக்கப்படிக்க நெஞ்சிலெழும் பூரிப்பு!

 

வேற்றுமொழியாரும் உன்னால் தமிழ்கற்பர்!

போற்றுமொழியால் உன்னைப் புகழ்ந்துரைப்பர்!

காற்றுள்ள காலம்வரை நீயும் நிலைத்திருப்பாய்!

ஆற்றல் உனக்குண்டு! அழியாப் புகழ்பெறுவாய்!

 

சத்தான செய்திகளை சளைக்காமல் பகர்ந்திடு!

தமிழர்வாழும் இடமெல்லாம் நீங்காமல் நிறைந்திடு!

எத்தனை தடைவரினும் அத்தனையும் தகர்த்திடு!

தமிழ்ச்சேவை எனும் வழியில் தொய்வின்றி நடையிடு!

 

தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் இந்நாளில்

தமிழால் போற்றி உன்னைப் பாடுகிறோம்!

தமிழர் எங்கள் சொந்தம் நீயென்றே

அளவிலாப் பெருமிதம் கொள்கின்றோம்!

 

தமிழில் எளிமையின் தன்னிகரில்லா இலக்கணமே!

வானலை வளர்தமிழின் வளமான வாழ்த்துகள்!

தமிழ்த்தேர் அள்ளித் தரும் தரமான வாழ்த்துகள்!

தரணியுள்ளவரை வாழ் என்று வாழ்த்துகிறோம்!

 

ஜியாவுத்தீன் & காவிரிமைந்தன்

வானலை வளர் தமிழ் – தமிழ்த்தேர்

துபாய் – ஐக்கிய அரபு அமீரகம்

News

Read Previous

வெள்ளை உணவுகள் நண்பனா? எதிரியா?

Read Next

இறைவனையே எண்ணவைத்தார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *