தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

Vinkmag ad

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.  இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !தமிழணங்கே !

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

நன்றி.. கவியரசு கண்ணதாசன் மின்னஞ்சல்  04.04.2012  திமிரி   வேலூர் மாவட்டம்…

 

 

 

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

http://www.anbujaya.com/

 

News

Read Previous

ஜுலை 31, சென்னையில் இதயங்களை இணைக்கும் விழா

Read Next

பார்மஸிஸ்ட் உமர் முக்தார் அத்தம்மா வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.