ஜனநாயகம்

Vinkmag ad

ஜனநியாயமே ஜனநாயகம்.
மக்களின் நல் சிந்தனை,
 ஆக்கமே ஜனநாயகம்.
மக்கள் பெற்றிடும் நன்நல,
சிறப்பே ஜனநாயகம்.
மக்களின் உறிமை, உடமை,
பாதுகாப்பே ஜனநாயகம்.
மக்களுக்காய், மக்களால் ஆளும்
ஆட்சியே ஜனநாயகம்.-ஆனால்
நாம் இன்று காண்கின்றோம்,
ஜன அநியாயம், அட்டூழியம்.
மனிதன் வகுத்த ஜனநாயகத்தை,
பறித்ததோ பணநாயகம்.
மனிதனிடம் இல்லை ஜனநாயகம்
கூடியுண்ணும் காக்கைகளிடம்
கண்டோம் ஜனநாயகம்.
அன்று சர்வாதிகாரத்தில்,
கண்டோம் ஜனநாயகம்.
இன்றோ ஜனநாயகத்தில்,
காண்கின்றோம் சர்வாதிகாரம்.
மதங்களை மோத விட்டு,
குளிர் காய்கின்ற அரசியல்,
அதனில் உருவான சாக்கடைகள்,
குடி கெடுக்கும் கேடாளர்கள்,
ஜனநாயகத்தை புதைத்ததால்,
கோயில்கள் இடி பட்டன,
ஜாதி மத கலவரங்கள்,
அதனில் விளைந்த நாசங்கள்,
சீர் கேடுகள், சீரழிவுகள்,
அலங்கோல அவலங்கள்,
இயற்கை பேரழிவுகள்,
இழிநிலை மோசங்கள் க்ண்டு
நிம்மதியற்ற நித்திய ,
பயம்தான் கண்டோம்.
எல்லோரும் எல்லாமும்
பெற வேண்டும்,
இல்லாமை இல்லாத,
நிலை வேண்டும்,
என்று பாடிய கவியரசு,
கண்ணதாசன் சொன்ன,
சீர் பெரும் ஜனநாயகத்தை,
என்று காண்போம்,
கேளுங்கள் தரப்படும்,
தட்டுங்கள் திறக்கப் படும்,
என்று சொன்ன ஏசுநாதரின்,
”ஜனநாயகத்தை”
என்று காண்போம்.
எல்லோரும் ஓர் குலம்,
ஓர் குடும்பத்தின் மக்கள்,
சாந்தி, சமாதானம்,
சமத்துவம், சகோதரதத்துவமும்,
சொன்ன முஹம்மது நபியின்,
ஜனநாயகத்தை என்று காண்போம்.
என்னுடைய ஏக்கத்தின் கேள்விக்கு,
பதிலோ இங்கே-ஆம்
பலம் மதத்தார்கள் கூடுகின்றோம்
நம்மில் மத சாயங்கள் இல்லை
காழ்புணர்ச்சி குரோதமில்லை
ஏற்றத் தாழ்வில்லை,
மனித நேயம்கொண்டு,
ஒன்று கூடி ஒற்றுமை காணும்,
இக் கவியறங்கமே,
நான் கண்ட ஜனநாயகம்.
விருதை .மு. செய்யது உசேன்.

News

Read Previous

முயன்றால் வெல்லலாம்.​.!!!

Read Next

முதுவை எஸ். தாஹாவுக்கு ஆண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.