முயன்றால் வெல்லலாம்.​.!!!

Vinkmag ad

கல்லினை உளியால் நீக்கி
            கவின்சிலைப் படைக்கும் சிற்பி
சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்
            சொல்வனம்  புலவன்  யாப்பில்
நெல்லினை  விதைத்து  ஆவல்
            நெருங்கிடக் காக்கும் வேளாண்
வில்லென வளைந்து  நெற்றி
             வியர்த்திட உழைக்கும் போழ்தும்
வல்லமை முயற்சி தந்த
           வழிகளின் துணிவு என்போம்
            
 
துயரமாம் நோயில் வீழ்ந்துத்
            துடித்திடும் எவர்க்கும் மிக்க
நயத்தகு வார்தை மூலம்
           நலம்பெற வாழ்த்திப் பேசு
உயர்ந்திடப் போகும் தூரம்
          உன்னிடம் திறமைச் சேரும்
வியத்தகு மாற்றம் தந்த
        வித்தகர் வழிகள் போற்று
 
 
தேடுதல் நிறுத்த வேண்டா
           தெரிந்திடாப் பாதை  வேண்டா
கூடுதல் பலனே வெல்ல
            கூட்டணி முயற்சி வேண்டும்
பாடுதல் தெம்பைத்  தூண்டும்
          பாசமாய்ப் ப்ழக்  வேண்டும்
வாடுதல் பிடியில்  ஏழை
          வாழுதல் நீக்க வேண்டும்

 
யாப்ப்பிலக்கணம்;
விளம், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
 

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

Read Next

ஜனநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *