குளம்

Vinkmag ad

குளம் 

———–

 

நீரலை பக்கங்கள் புரள 

திறந்து கிடக்கும் தண்ணீர் புத்தகம் !

 

வட்டமான குளத்திற்கும் உண்டு 

வாசகர் வட்டங்கள்.

 

ஒரே பாய்ச்சலில் உள்ளான்

நீச்சலிட்டு மூழ்கிப்படிபவர்கள் ஒரு ரகம்.

 

பாசிக்கு பயந்து 

வாசிக்க வராமல் படித்துறையில் அமர்ந்தபடி 

அட்டை’ உற்றுப்பார்பவர்களும் உண்டு .

 

உன் மீது கற்களை எறிந்தாலும் 

அதை வாங்கிவைத்துக்கொண்டு 

நெளியும் புன்னகையால் 

குளிர வைப்பதால் 

நீ தண்ணீர் தெரஸா!

 

கரையோரத்து மரங்கள் 

தினமும் பூக்கள் தூவி 

குனிந்து வாசிக்கும் 

புனித நூலும் நீதான்!

 

கோடை காலத்தில் 

சிறுகதை தந்தாய்

மழை காலத்தில் 

தொடர்கதை ஆனாய் 

 

இன்று …

காலக்கரையான் அந்த கதையை 

படித்து ‘முடித்து’விட்டதால் 

விடை தெரியாத 

விடுகதையாகி நிற்கிறது 

குளம் !

 

  – கவிஞர். அப்துல் வதூத், துபாய் 

 

 

News

Read Previous

அமீரக தேசிய தினம்

Read Next

ஏனிந்தக் கோபம்

Leave a Reply

Your email address will not be published.