கீழக்கரை எம்.ஜி.ஆர் !

Vinkmag ad

bsa

கீழக்கரை எம்.ஜி.ஆர் !

 “ஒரு மனிதர் நல்லதையேச் செய்கிறார்மக்கள் அவரைப் புகழ்கிறார்கள்அவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என நபி பெருமானாரிடம் கேட்கப்பட்டபோது நபி பெருமானார் சொன்னார்கள் அந்த மனிதருக்கு நாளை மறுமையில் என்ன வாழ்க்கை அமையப் போகிறது என்பதற்கு பூமியிலே மக்கள் சாட்சி சொல்கிறார்கள்“ என்று.

 

பி.எஸ்.ஏ.வைப் பற்றி அன்பின் முகவரி 

என்றத் தலைப்பில் புத்தகம் செய்யப் போகிறேன்  

என்றார் என் நண்பர் திருச்சி செய்யது.   

ஏன்? எனக் கேட்டேன் !

 

“அன்பைத் தேடி என்ற முதற் புத்தகத்தை எழுதிவிட்டு

அன்பின் இருப்பிடம் எதுவெனத் தேடிச் சென்றாராம்

 

அந்த அன்பின் முகவரி  பி.எஸ்.அப்துல் ரஹ்மான் என

இறுதியில் அடையாளம் கண்டாராம் !

 

பி.எஸ்.ஏ.வே ஒரு பெரிய புத்தகம் !

புத்தகத்தைப் பற்றி இன்னொரு புத்தகமா?

அதியமானுக்கே நெல்லிக்கனியா?

கலைஞருக்கே தமிழா?

புரட்சித்தலைவருக்கே பொன்முடிப்பா? என்றேன்.

 

பி.எஸ்.ஏ.வைப் பற்றி எழுதுங்கள் என்றார்

எதைப் பத்தி எழுத…. அவர் சாதனைகள் ஒன்றா? இரண்டா?

 

அதைப் பத்தி இதைப் பத்தி என்று எதைப் பத்தி

எழுத !        எத்தனைப் பத்தி எழுத?

 

 

பி.எஸ்.அப்துல் ரஹ்மானா இவர்?  – இல்லை

பி(ஸின)எஸ் அப்துல் ரஹ்மான் இவர்!

தொடாத துறையில்லை இந்த வெள்ளைத்துரை

கீழக்கரையின் செல்லத்துரை!

 

 

 

கீழக்கரையில் பிறந்தார் புகாரி செய்யது அப்துல் ரஹ்மான்

கொழும்பு ஹாங்காங் துபாய் பெல்ஜியம் வளைகுடாவென

அக்கரைகளில் வெற்றிக்கொடி கட்டிப் பறந்தார்

 

எம்.ஜி.ஆரை நேசித்தவர்கள் பலர் 

அந்த எம்.ஜி.ஆரே நேசித்தவர் இவர்!

 

கொடுத்துச்  சிவந்த கரங்களின் படங்களுக்கே 

கொடுத்து உதவியவராம் பி.எஸ்.ஏ

 

படங்கள் கொடுக்கவா பி.எஸ்.ஏ பண உதவி செய்தார்?

இல்லை சமுதாயத்திற்கு பாடங்கள் கொடுக்க!

 

மேரா நாம் அப்துல் ரஹ்மான் மேரா நாம் அப்துல் ரஹ்மான்!

ஒனறே சொல்வார் நன்றே செய்வார் அவரே அப்துல் ரஹ்மானாம்!

ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்! என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் பி.எஸ்.ஏ.வுக்கு புகழுரைகள்!

 

எம்.ஜி.ஆருக்கு வெள்ளைத் தொப்பி

இவருக்கு கறுப்புத் தொப்பி

 

இருவருக்கும் தேகமோ சிகப்பு

கொடுத்து கொடுத்து கரங்களெல்லாம் சிவப்பு

 

பணத்தை மட்டுமா தந்தார் பி.எஸ்.ஏ !

பல பேருக்குப் பணியையுமல்லவா தந்தார்!

 

வளைகுடாவில் எண்ணெய் தோண்டிய போது

இவர் நிறுவனம் கட்டிடம் கட்ட மண்ணைத் தோண்டியது!

 

கண்டம் விட்டு கண்டம் பாயும்

அக்னி ஏவுகணைக்கு முன்னே

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த இந்தியர் இவர்!

 

அந்த அக்னியால் அழிவுதான் இருக்கும்

இந்த அக்னியால் ஆக்கம் பெருகும் .ஆம்.

பி.எஸ்.ஏ என்ற இந்த அக்னியால் தொழிலாக்கம் பெருகும்!

 

இவரிடம் விஷன் இருந்தது அதனால்

பல டிவிஷன்கள் பிறந்தது!

 

காசு வந்தால் கண்டு கொள்ளாமல போகும் காலமிது

கடைநிலை ஊழியனைக் கூட கண்டு பேசும் பாசம் இது !

 

சென்னை ஜெமினி மேம்பாலம் இவர்

நிறுவனத்தின் சாதனைக்கோர் அடையாளம்!

 

கல்விக்கு இவர் செய்தவை ஏராளம் ஏராளம்

பொறியியல் கல்லூரி ஆரம்பித்தால் என்ன

என இவர் பொறியில் தட்டியது !

 

கிரெசன்ட் பொறியியற் கல்லூரி கிரெசன்ட் பள்ளி

என வண்டலூரில் கட்டியது !

 

பெண்கல்வி பொன்கல்வி என உணர்ந்தார்

கீழக்கரையில் பெண்களுக்கென கல்லூரி திறந்தார் !

 

அச்சுத் துறையில் முத்திரை பதிக்க

நேஷன் அண்ட் த வேர்ல்ட் என்ற இதழ் பிறக்க

 

ஆல் இண்டியா இஸ்லாமிக் .ஃபவுண்டேசன் சிறக்க

யுனைடெட் எகனாமிக் ஃபோரம் திறக்க

 

மருத்துவமனைகள்  பள்ளிவாயில்கள் அநாதையில்லங்கள என

தாராளமாய் உதவி செய்தார் ஏராளமாய் உதவி செய்தார்

 

அவர் புகழ் நானிலம் எங்கும் மென்மேலும் சிறக்க

என்றென்றும் தழைக்க ஆசிக்கிறோம்.  அதையே

இறைவனிடத்தில் யாசிக்கிறோம்   
எங்கள் இறைவா ! 
உடலால் மறைந்தாலும்
உழைப்பால் புகழால் மறையாத
பல பேர் இப்புவியில் நற்பதவி அடைய
காரணமாக இருந்த
பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கட்கு
இம்மையிலும் மறுமையிலும்
நற்பதவிகளை வழங்குவாயா
தென்றல் கமால் 

 

 

 

News

Read Previous

நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.

Read Next

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published.