கல்வி

Vinkmag ad

கல்வி

 

பிடித்தவர்க்கு இன்பம்!

பிடிக்காதவர்க்கு இம்சை!

பணக்காரப் பெற்றோர்க்கு

மேட்டர் ஆஃப் மணி!

அன்றாடங்காய்ச்சிகளுக்கோ

கல்வி எட்டாக் கனி!

நிறுவனங்களுக்கோ கல்வி

லாபம் ஈட்டும் அட்சய பாத்திரம்!

 

சுமைகளாய்ப் புத்தகங்கள்

எழுதியவர் மட்டும்

அறிந்த பாடங்கள்!

பிழையாய்

ஒட்டிக்கொண்ட பக்கங்களை

பிரித்தும் பார்க்காமல்

எடைக்குச் சென்றது பாவம்!

 

பொருளியல் என்பார்

அறிவியல் என்பார்

படிவம் பூர்த்திசெய்ய

பலர் அறியார்!

 

கண்களாகும் கல்வியை

கற்றும் பின்பற்றாமல்

குருடராய் இருக்க வேண்டாம்!

 

நிலையான கல்வியை

பெற்றும் பேணாத

வீணராய் இருக்க வேண்டாம்!

 

அள்ள அள்ளக் குறையாமல்

ஊறிவரும் கல்வியை

உணர்ந்து முகராத

மூடராய் இருக்க வேண்டாம்!

 

வணிகவியல் உண்டு!

புள்ளியியல் உண்டு!

வாழும் நாட்களைப் புனிதமாக்க

மனிதயியல் பயில்வோம்!

மாண்புறவே வாழ்வோம்!

 

– நர்கிஸ் பானு

அஜ்மான் – அமீரகம்

 

News

Read Previous

உயிருமில்லை மெய்யுமில்லை

Read Next

சென்னைத் தமிழ்

Leave a Reply

Your email address will not be published.