என் நாடு

Vinkmag ad

என் நாடு

ஸ்ரீவிபா

shriviba@gmail.com

13-10-2014

 

தவமிருந்து வெளிநாட்டில் வேலை கிடைத்திடக் காத்திருந்தான்

கிடைத்ததும் பெட்டிப் படுக்கையோடு ஓடிச் சென்றான்

திரும்பி வந்தவன் தன் மனைவியோடு மீண்டும் சென்றான்

பெற்ற பிள்ளைகளின் புகைப் படங்களைப் போட்டு மகிழ்ந்தான்

ஃபேஸ் புக்கில் இருந்தபடி

“ என்ன நண்பா “ என்று குசலம் விசாரித்தான்

இங்கு இருந்திருந்தாலும் “யார் நீ?” என்று கேட்டிருப்பான்

அங்கிருந்தபடி பொழுதுபோக்கிற்கு தீபாவளி, பொங்கல் எனக்

கொண்டாடினான்

பலவருடத்துக்கு ஒரு முறை இங்கு வரும் அவன்

”இது ஊரா?” என்பான்

“எப்படி இருக்க முடிகிறது?” என்று கேட்பான்

”இந் நாடு இன்னும் மாறவே இல்லை “ என்று நகைப்பான்

தன் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாது என்று பெருமைப் படுவான்

மண்ணின் மதிப்பை உணராது போனவன்

“ நண்பா, நல்ல இடம் இருந்தால் பாரேன், வாங்கிப் போடலாம்” என்பான்

மக்களே ! இச் சூழ்நிலைக்கு இனி இடம் கொடுக்கக் கூடாது

அவர்களின் மெத்தனப் பேச்சுக்கு செவி சாய்க்கக் கூடாது

அந் நாட்டின் பெருமை பாடும் அவர்களின் பாட்டிற்கு நாம் தாளம்

போடக் கூடாது.

நண்பா ! இச் சிந்தனையோடு என்னை இனி நெருங்காதே !

என் நாட்டினைப் பற்றி என்னிடம் ஏளனமாய்ப் பேசாதே !

 

———–0000000——–

 

 

News

Read Previous

முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

Read Next

வியக்க வைக்கும் வேர்க்கடலை !

Leave a Reply

Your email address will not be published.