உலகத்தை தேடுபவனுக்கு

Vinkmag ad

பயணம் முடிவுறுகிற
தெருவில் நின்றும்
திரும்பிப் பார்க்கிறேன்
உங்கள்
அபிமானங்களிலிருந்து
விடைபெற்றவனாய்

இனியான கணங்கள்
எனக்கானதல்ல
வேறொருவரின் இடத்தை
எத்தனை காலத்திற்கு
ஆக்கிரமிப்பது நான்

உங்கள் கனவுகளை சிதைத்ததை
விடுத்தும்
சிரம் தாழ்த்துகிறேன்
நீங்கள் தேடிய உலகத்தை
என்னால்
அடையாளப் படுத்த
முடியவில்லை என்ற
வலியும்,வருத்தமும்
இருக்கின்றன எனக்கும்

இங்கு நான் தேடிய
உலகத்தையும்
காண முடிய இல்லையென்று
உங்களில் எத்தனை பேருக்கு
தெரியும்?
இனி நீ ங்கள் தேடும்
உலகமும்
நான் தேடியது போலவே
இருக்கும்
ஏனனில்;
நாம் எல்லோரும்
தேடிக்கொண்டிருப்பது
தொலையாத ஒரு உலகத்தை தான்!

ரோஷான் ஏ.ஜிப்ரி

rozhanajifry@gmail.com

News

Read Previous

சுகாதாரத்திற்கு ஒரு ‘சுன்னத்து’

Read Next

விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *