உன் வெற்றி..உனதா..?

Vinkmag ad

மைசூர் இரா.கர்ணன்

உன் வெற்றி..உனதா..?
மேடைக்கு வழி காட்டும்
மேன்மைமிகு நல்மனங்கள்
திறமைக்கு ஒளி காட்டும் தீபநல் கதிர்களாம்,

ஆயிரம்தான் ஆற்றல் அடைந்தவர் ஆகினும்
தாயன்பாகி அருளை தருபவர் துணையானால்,

வெற்றிகள் நமதாகும் வீணர்கள் தோற்றிடுவார்,
வாழ்த்துக்கள் வரவாகும் வாழ்க்கையும் மேலாகும்.

குலப் புண்ணியம் குவிந்த நல்லோர்
குவித்திடுவார் புகழை கோபுரமாய் பூமியிலே.

உன் அறிவு ஆக்கி வைக்கும்
உலகம் போற்றும் நல் சாதனைகள்

குருதி வழி வந்த வலிமை
குணம் கொள் வாழ்வில் என்றும்.

சூழ்ச்சி மனிதர் தோல்வி காண
தொடர் வெற்றி அடையும் மாந்தர்,

வீழ்ச்சி காணா வாழ்வு நிலை
மாட்சிமையாம் பெற்றோர் கொடை.

மைசூர் இரா.கர்ணன்.
05 .11 .2020

News

Read Previous

வாய்ப்பு

Read Next

பீரப்’பா’வில் ஒரு பிரமிப்பு

Leave a Reply

Your email address will not be published.