இசைக்கடலுக்கு அம்பது வயது

Vinkmag ad

இசைக்கடலுக்கு அம்பது வயது

=============================================ருத்ரா இ பரமசிவன்.

திரு.ஏ ஆர்  ரகுமானுக்கு ஒரு பொன்விழா

மோகமுள் என்றொரு படம்

அதில் “நெடுமுடி வேணு”

ஒரு சேவலை பின் தொடர்ந்து

போய்க் கொண்டிருப்பார்!

“நேற்று ஒரு ஸ்வரத்தில் கூவியது

இன்று எந்த ஸ்வரத்தில் கூவும்

என்று

அதன் பின்னால் போய்க்கோண்டிருக்கிறேன்”

என்பார்.

கர்நாடக சங்கீத மேதைகள்

கொசுக்களின் ரெக்கைகளின்

“ஞொய்..”ல் கூட

மேள கர்த்தா ராகங்களையும்

ஜன்ய ராகங்களையும்

பிச்சு பிச்சு புரிந்து கொள்ளுவார்கள்!

மேலை நாட்டு இசை மேதைகளுக்கு

ஒலி செவிக்குள்

நுழைய வேண்டியதே இல்லை.

மௌனப்பிழம்பில்

மன அதிர்வுகளின்

அலை எண்களை காகிதத்தில்

பதிப்பித்த “நோட்டுகளின்” மூலம்

இந்த உலகத்திற்கு

ஓசை இன்பத்தை

தெவிட்டாத அமுதமாய் புகட்டினார்கள்.

“பீத்தோவன்” என்ற‌

அந்த மேதையை

பில்லியன் ஒளியாண்டுகள் அப்பால் நின்றும்

பிரபஞ்ச செவிகள் ருசித்து

“அப்ளாஸ்” செய்யும்.

ஏ.ஆர்.ரகுமான்

நம் நாட்டுக்கு கிடைத்த‌

இசைக்கருவூலம்.

மேலே சொன்ன இசைக்கீற்றுகளின்

எல்லா “நெய்தலும்”

அவரிடம் விந்தை கூட்டும்.

உலகத்தமிழர்கள் கொண்டாடும்

இசைப்பேரொளி!

உலக இசைத்தேனீக்களின்

உணவுக்கிட்டங்கி அவர்.

அவரது இசை மகரந்தங்கள்

மானுட ஆளுமையின்

பூக்களில் கடல்கள் போல் பொங்கும்.

கணினியில்

கரு பிடித்து

இசையின் உரு காட்டுவார்,

பல்லியும் பாச்சாவும் கூட‌

சிலிர்த்துக்கொண்டு ஓசையெழுப்பினால்

திரைப்பட டூயட்டுகளுக்கு

அவர் ஆத்ம ஒலி என்னும்

கேளா ஒலிக்குள் (அல்ட்ரா சோனிக்ஸ்)

வர்ணங்களாய் மெட்டு அமைக்கும்.

இசைத்துடிப்புகளில்

நான்கு வர்ண எச்சில் படுத்தும்

அற்பங்களுக்கு

அவர் விரல் கார்வைகளில் இடமில்லை.

காக்கை குருவிகூட‌

அவர் சாதி தான்.

அந்த அலகுக் கீற்றுகளிலும்

அவரது பல்கலைக்கழகம் தான்.

இந்த படம் ..அந்த பாட்டு என்று

இவருக்கு

மேப் வரைந்தால்

அந்த “சப்த” ரிஷி மண்டலம் தான்

எல்லை.

வயதுகள் எனும்

“ஸ்பீடு ப்ரேக்கர்கர்”களை

அவர் முன் காட்ட வேண்டாம்.

அந்த இசைப்பிரளயம்

பொங்கிக்கொண்டே இருக்கட்டும்.

வாழ்க!வாழ்க!

அவர் நீடூழி நீடூழி வாழ்க!

News

Read Previous

ஜனவரி – 6. வேட்டி தினக் கவிதை

Read Next

வாட்ஸப் – பகிரி

Leave a Reply

Your email address will not be published.