ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

Vinkmag ad
(பி. எம். கமால், கடையநல்லூர்)

தாத்தா நீவாங்கித்

தந்தசு  தந்திரத்தைக்
கோட்சே   விடம்கொடுத்தாய்
கொன்றுவிட்டான் உன்னை !
இன்று சுதந்திர நாள் !
யாருக்குச் சுதந்திரம்
என்று விளங்கவில்லை !
உன் கொள்கைகள் எல்லாம்
அடமான வங்கிகளில்
 முடமாகிப் போனது !
உன்கோ லத்தில்
உள்ளவர்கள் சேரிகளில்
சுதந்திர மாகத்தான்
சுற்றிவரு கின்றார்கள் !
சுதேசி வேண்டுமென்று
சூளுரைத்துப் போரிட்டாய் !
எங்களை
ஆளுகின்றவர்களோ
அந்நிய முதலீட்டில்
ஆசைகொண் டலைகின்றார் !
 நீ
வாங்கித் தந்த சுதந்திரம்
இன்னும்
ஏழையின் வாசற்படிக்கு
வந்து சேரவில்லை !
ஆரஞ்சு மிட்டாய்
மட்டுமே எங்கள்
ஆசைப் பிள்ளைகளுக்கு
சுதந்திர நாளைச்
சுட்டி காட்டுகிறது !
தாத்தா ! நீ
வாங்கித் தந்த சுதந்திரம்
பள்ளிவாசலை இடிக்கவா
பயன்பட வேண்டும் ?
மோடிகளும் கேடிகளும்
முளைத்துவிட்ட பாரத்தில்
வாடிய பயிர்களாய்
வாழும் ஏழைகள்
இன்னும் சுதந்திரத்தை
எட்டிப் பார்க்கவில்லை !
உன்
கைத்தடியை ஆயுதமாய்
கையில் எடுத்தவர்கள்
சுதந்திரமாகச்
சுற்றிவரு கின்றார்கள் !
நீ வாங்கித் தந்த
சுதந்திரம் தான்
மோடிகளின் கைகளில்
துப்பாக்கியைத் திணித்துத்
துர்ப்பாக்கியம் செய்ததா ?
தாத்தா  நீ
மீண்டும் ஒருமுறை
இங்கே பிறக்கவேண்டாம் !
பிறந்தால் உன்னைக்
கள்ளுக் கடைகளுக்கு
காவலுக்குப் போட்டு விடுவார்கள் !
பொறுமையை அஹிம்ஸைஎன்று
போதித்த  புத்தன் நீ !
உன்னை
சிங்களத் தீவுக்குச்
சீருடை அணிவித்து
எங்கள்  இனத்தவரை
இல்லாமல் செய்வதற்கு
போர்த்தள  பதியாகப்
போய்வரச் சொல்வார்கள் !
அந்நிய வங்கிகளில்
அடங்கிக் கிடக்கின்ற
கள்ளப் பணத்திற்கு
காந்தியே உன் பெயரை வைத்து
காந்தி கணக்கென்று
கணக்குக் காட்டுகின்றார் !
இதுவும் வேண்டும்;
இன்னமும் வேண்டுமுனக்கு !
ஏன் தாத்தா  சுதந்திரத்தை
எங்களுக்கு வாங்கித் தந்தாய் “
தாத்தா  நீ
சுதந்திர மாலையை
வாங்கித்தந்தாய் !
நாங்கள்
மணம்  பெற்று
வாழ்வதற்காக !
அம்     மணம் எங்களை
 நிறைக்கவில்லை! மாறாக
அம்மணம்  எங்களுக்கு
ஆடையாய்க்  கிடைத்தது !
உன்னோடு உன்கொள்கை
எரியூட்டப் பட்டதென்று
ஆடுவோமே பள்ளுப்
பாடுவோமே !
ஆனந்த வராளி
இராகத்தை விட்டுவிட்டு
முகாரியினில் இனி பாடுவோமே !

News

Read Previous

முலாம் பூசிய விலங்குகள்

Read Next

முஅத்தின்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *