அல்லா அல்லா .. நீயில்லாத இடமே இல்லை..

Vinkmag ad

mohd.bin.dukalk (1)அல்லா அல்லா .. நீயில்லாத இடமே இல்லை..

உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய்க் காணும்
ஒரு வாசல் பள்ளிவாசல்

கடவுள் அமைத்த மேடை இவ்வுலக வாழ்க்கை என ஒரு மதம் சொல்கிறது.  இறைவனின் படைப்பில்தான் எத்தனை எத்தனை உயிரினங்கள்.. தோன்றியது.. ஆதாம் ஏவாளில் என இன்னொரு மதம் சொல்கிறது.. இன்னும் எத்தனை எத்தனை விதமான மதங்கள் இங்கே படைத்தவனை அடையாளம் காட்டி முன் மொழிந்தாலும் அனைவரும் வழிமொழிவது ஏக இறைவனைத்தான்!

வாழ்க்கைக்கு நெறிவகுக்க.. மனித மனத்தைக் கட்டுக்குள் வைக்க.. சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதை நடைமுறையில் செயலாக்கம் செய்ய உருவாக்கப்பட் சம்பிரதாய சடங்குகளை சற்றே விடுத்து உற்றே நோக்கினால் அந்த உண்மை புலப்படும்!  அகக் கண்களில் ஆண்டவன் காட்சியளிப்பான்!  ‘கடவுள்’ என்கிற சொல்லின் பொருளே உள்ளத்தில் உள்ளவன் என்பதைக் குறித்திடவே.. பகுக்கப்பட்ட சொல்லிலும் படைத்தவனின் காட்சி!  கவிஞர்களும் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து உணர்ந்து எடுத்தியம்பும் சிறப்பைப் பெற்றவர்களாய் திகழ்கிறார்கள்!  அவ்வரிசையில் கவிஞர் வாலியின் உள்ளம் அல்லாவை தரிசிக்கும் அழகைப் பாருங்கள்!  இசை அமைத்துப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ‘முகமது பின் துக்ளக்’ என்னும் திரைப்படத்திற்காக!!

பாடல்: அல்லா அல்லா
திரைப்படம்: முகம்மது பின் துக்ளக்
பாடியவர்: எம்.எஸ். விஸ்வநாதன்

இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1971

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை

அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
அல்லா அல்லா லா அல்லா அல்லா

நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
மனம் வெளுக்க எது தான் உண்டு?
நபியே உன் வேதம் உண்டு

அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா

உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய்க் காணும்
ஒரு வாசல் பள்ளிவாசல்

அல்லா அல்லா லா அல்லா அல்லா
அல்லா அல்லா லா அல்லா அல்லா

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
நாயகமே நீயே சொந்தம்

அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
அல்லா அல்லா லா அல்லா அல்லா

தெய்வ சன்னிதானங்கள் – எங்கும் எப்போதும் புனிதமானவை! பவித்ரமானவை!  அந்தச் சன்னிதியில் ஆண்டவன் அருள் எல்லோர்க்கும் நிச்சயம்! இது தெய்வ சத்தியம்!!

 msv vali

News

Read Previous

பள்ளிக்கு வெளியே வானம்

Read Next

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது

Leave a Reply

Your email address will not be published.