அறிவியல் உயர்வே

Vinkmag ad

அறிவியல் உயர்வே

அறிவின் மேன்மை அறிவியல் பிறப்புகள்,
அவைகளின் வருகை மனிதனின் சிறப்புகள்,
நல்லவர் கையின் நெருப்பும் தீபம்
நாசகர் இருப்பின் அமுதமும் நீசம்.

ஆக்கமும் அழிவும் மனிதனின் தூண்டல்
நோக்கமும் நன்மை கொண்டதாய் இருப்பின்
ஓங்கவே செய்யும் உலகம் ஒன்றாய்,
ஓம்புமே நம்மை அவைகள் நன்றாய்.

கற்பவர் கற்றவர் கணினியால் சிறப்பர்,
கள்மனம் கொண்டவர் கயமையால் அழிவர்,
அறிவியல் தந்த அருமையே கணினி,
அறிவின் மடமை அழிவைத் தேடல்.

கெடுவார் என்றும் கேடு நினைப்பார்.
கெடுப்பது கணினி தவறே கணிப்பு.
வெல்வார் நன்றாய் கணினியில் சிறந்தோர்.
செல்வார் மிடுக்காய் செல்வத்தில் சிறந்தே.

மைசூர் இரா.கர்ணன்

News

Read Previous

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா

Read Next

தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்

Leave a Reply

Your email address will not be published.